தம்பி வினோத்து, வலிமை படத்துலதான் சொன்னதை செய்யல.. இந்த முறை கரெக்டா இருக்கனும் என எச்சரித்த தல

தல அஜித் நடிப்பில் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னமும் முடிந்தபாடில்லை. இன்னும் பத்து பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது.

க்ளைமேக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட வேண்டும் என வினோத் விடாபிடியாக இருப்பதால் தற்போது வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதிக்காக படக்குழுவினர் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் தல அஜித் வலிமை படத்தை எதிர்பார்ப்பதை விட அதற்கு அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்து விடலாம் என வினோத்துக்கு ஆர்டர் கொடுக்க, அவரும் ஏற்கனவே தல 61 படத்திற்காக சொன்ன ஒருவரிக்கதையை தற்போது திரைக்கதையாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஜூலை மாதம் தல 61 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி விட வேண்டும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தல அஜித் தனியாக வினோத்தை அழைத்து ஒரு எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளாராம்.

வலிமை படம் தான் சொன்ன தேதியில் உருவாக முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தல 61 படம் குறித்த தேதியில் கண்டிப்பாக வெளியாக வேண்டும் எனவும், இந்த படத்திற்காக 60 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

வலிமை படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அப்படி ஒருவேளை தள்ளி சென்றாலும் தீபாவளிக்கு வந்து விடும். அதனைத் தொடர்ந்து அடுத்த சம்மருக்கு தல 61 படத்தை களமிறங்கிய ஆகவேண்டுமென தல அஜித் கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம்.

valimai-thala-ajith-cinemapettai
valimai-thala-ajith-cinemapettai