அஜித் மாதிரி நடிகர்களுடன் நடிக்கும் போது மூளைய கழட்டி வச்சிடுவேன்.. பரபரப்பை கிளப்பிய வில்லன்

இன்றைய சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு படத்திற்கு ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வில்லன் கதாபாத்திரத்தை இயக்குனர்கள் எந்த அளவுக்கு வித்தியாசமாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்து காட்டுகிறார்கள். நிறைய படங்கள் வில்லன் கேரக்டரினால் கூட வெற்றி அடைகின்றன.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் வில்லன் கேரக்டர் என்பது ரொம்ப சஸ்பென்ஸ் ஆக கூட வைக்கப்படுகிறது. பிரபல ஹீரோ, காமெடியன், இயக்குனர்கள் கூட திடீரென்று ஒரு படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்று விடுவார்கள். சில நேரங்களில் தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகர்கள் பாலிவுட் படத்தில், வட இந்திய சினிமாவை சேர்ந்த நடிகர்கள் தென்னிந்திய சினிமாவிலும் வில்லனாக நடிப்பதுண்டு.

Also Read:அஜித்தின் சினிமா வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட 6 படங்கள்.. நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை காட்டிய வாலி

அப்படி வட இந்திய சினிமாவில் இருந்து, தென்னிந்திய சினிமாவிற்கு வில்லனாக வந்தவர்தான் நடிகர் ராகுல் தேவ். இவர் கேப்டன் விஜயகாந்த் நடித்த நரசிம்மா, ராகவா லாரன்ஸ்ஸின் முனி, நடிகர் அஜித்தின் வேதாளம் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். கடைசியாக லெஜன்ட் படத்தில் இவர் வில்லனாக நடித்தார்.

இந்திய சினிமாவின் பிரபல நடிகராக இருக்கும் ராகுல் தேவ் சமீபத்திய பேட்டி மூலம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் நன்றாக படித்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் பொழுது என்னுடைய மூளை மற்றும் புத்திசாலித்தனத்தை வீட்டில் வைத்துவிட்டு தான் வந்து நடிப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

Also Read:ஹீரோக்களால் காமெடி பீஸ் ஆன 5 வில்லன்கள்.. விவேக் ஓபராயை பங்கம் செய்த அஜித்

மேலும் தென்னிந்திய சினிமாக்கள் இன்னும் பழைய டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி வருகின்றன எனவும், இரண்டு பேர் சண்டையிடும் பொழுது யாராவது சட்டையை கழட்டி தங்களுடைய உடம்பை காட்டுவார்கள், இதுதான் தென்னிந்திய சினிமாவில் நடக்கிறது. படத்தின் வணிகத்திற்கு இவ்வாறு செய்கிறார்கள். யாருடைய படைப்பாற்றலையும் நாம் குறை சொல்ல முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் அவர் ஜிம் பாடியான என்னை வலுவே இல்லாத ஹீரோ அடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதை சகித்து தான் நடித்த ஆக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். தற்போது சினிமா ரசிகர்கள் இவருடைய இந்த கருத்தை பயங்கரமாக விமர்சனம் செய்து வருகின்றனர். வட இந்திய ஹீரோக்கள் மட்டும் திடகாத்திரமாகவா இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

Also Read:இவங்கள தவிர இந்த 6 வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது.. போலீசாக இருந்து மங்காத்தா ஆடிய அஜீத்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்