வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட கஷ்டம்.. கவலையில் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணியே அஜித்தின் 60வது படமான வலிமை படம் உருவாக்கியுள்ளது. இப்படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

வலிமை திரைப்படத்தில் அஜித் உடன் ஹுமா குரேஷி, கார்த்திகேய, யோகி பாபு, மனோ பாலா, சுமித்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜுலை மாதத்தில் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய நாங்க வேற மாரி பாடல் ஹிட்டானதை தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது பாடலான செகண்ட் சிங்கிளாக அம்மா பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். வலிமை படக்குழு முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய வேண்டும் என்பதற்காக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட உள்ளது என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது. விரைவில் வலிமை டிரைலர் வர உள்ளதாக பல உறுதியான தகவல் வந்த வண்ணம் உள்ளது. இதனால் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த போனி கபூர் அவர் தனியாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ajith kumar boony kapoor
ajith kumar boony kapoor

இந்நிலையில் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் உரையாடும் போது எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இருவரும் கருப்பு உடையில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவுடன் வெளியிட்டு இருந்தார். அத்துடன் கடந்த ஆண்டு இதே நாள் நடுங்கும் குளிரில் ஐதராபாத்தில் வலிமை ஷுட்டிங்கில் அஜித்தும் நானும் என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் அஜித் நடுங்கும் குளிரில் கையை கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்த அவரது ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்