போனி கபூர் கற்றுக் கொடுத்த பாடம்.. ஆரம்பத்திலேயே சுதாரித்து கஜானாவை நிரப்பிய அஜித்

Actor Ajith: போனி கபூர் தயாரிப்பில் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் இணைந்தார். அதன் பிறகு இந்த கூட்டணி சேரவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சம்பள விவகாரம் தான். துணிவு படத்தின் போது சம்பள பாக்கி இருந்ததால் அஜித் டப்பிங் பேச மறுத்து விட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது.

அதேபோல் சம்பளம் குறித்து இன்னும் சில மன வருத்தங்களும் இருவருக்கும் இடையே நடந்திருக்கிறது. அதனாலயே அஜித் இனிமேல் அவர் தயாரிப்பில் நடிக்க கூடாது என பெரிய கும்பிடாக போட்டு விட்டாராம்.

கஜானாவை நிரப்பிய அஜித்

ஆனால் அவர் கற்றுக் கொடுத்த பாடத்தை தற்போது வரை கடைபிடித்து வருகிறார். ஏனென்றால் இப்போது எல்லாம் அவர் சம்பள விஷயத்தை முன்கூட்டியே பேசி உறுதி செய்து விடுகிறாராம்.

அப்படித்தான் விடாமுயற்சிக்கு அடுத்து அவர் நடிக்க இருக்கும் குட் பேட் அக்லி தயாரிப்பாளரிடமும் சுதாரித்திருக்கிறார். அதாவது இப்படத்திற்காக அவருக்கு 175 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதை தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த பேச்சு வார்த்தை எல்லாம் நடந்து முடிந்த பிறகு தான் அறிவிப்பே வந்திருக்கிறது.

மேலும் இதற்கு முன்பு படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் இந்த அளவு சம்பளம் தர முன்வரவில்லை. அதனாலயே தெலுங்கு தயாரிப்பாளர் உடன் அஜித் கூட்டணி வைத்துள்ளார். எது எப்படியோ இதன் மூலம் அவர் கஜானாவை நிரப்பி விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்