தீபாவளி ரேசுக்கு தயாராகும் 4 படங்கள்.. பந்தயத்தில் இருந்து ஒதுங்கிய அஜித்

பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் சில குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் வெளி வருவது வழக்கம். அப்படி வெளியாகும் திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் இந்த வருட தீபாவளியை முன்னிட்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது.

சர்தார்: பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். பல கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

முன்னதாக இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தால் தற்போது இந்த திரைப்படம் தீபாவளி ரேசில் களம் இறங்கியுள்ளது.

பிரின்ஸ்: சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் நடித்து வரும் இந்த பிரின்ஸ் திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அனுதீப் இயக்கி வரும் இந்த திரைப்படம் முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய தினத்தில் கார்த்தியின் சர்தார் படம் வெளியாக இருந்ததால் படக்குழு பிரின்ஸ் பட வெளியீட்டை தீபாவளிக்கு மாற்றினர். எதிர்பாராத விதமாக தற்போது கார்த்தியின் படமும் தீபாவளிக்கு மாற்றப்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார்.

ஏகே 61: வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாகி வருவதால் தீபாவளிக்கு படம் வெளியாகாது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தீபாவளி பந்தயத்தில் இருந்து அஜித் விலகியுள்ளார்.

வாத்தி:  தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தனுஷ் நடித்து வரும் இந்த வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இறுதி நேரத்தில் இந்த முடிவு எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

Next Story

- Advertisement -