Connect with us
Cinemapettai

Cinemapettai

anushka

Tamil Cinema News | சினிமா செய்திகள்

40 வயதைக் கடந்தும் சிங்கிளாகவே சுற்றும் 6 நடிகைகள்.. மவுசு குறையாத ஆன்ட்டிகள்

தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகளுக்கு வயது கூடிக்கொண்டே போனாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இன்னும் சிங்கிளாகவே உள்ளனர். சில நடிகைகள் தங்களுக்கு திருமணம் ஆனால் வயது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளனர். அப்படி 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகாத ஐந்து நடிகைகளை பார்க்கலாம்.

தபு : தபு தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர். தபு காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்ற தபு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது 51 வயதாகியும் தபு சிங்கிள் ஆகவே சுற்றுகிறார்.

கௌசல்யா : தமிழில் நேருக்கு நேர், சொல்லாமலே, வானத்தைப் போல, ஜேம்ஸ் பாண்ட் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை கௌசல்யா. இவர் வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துவந்தார். கௌசல்யாவுக்கு தற்போது 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமலே உள்ளார்.

நக்மா : தமிழ் சினிமாவில் ரஜினி, பிரபு, கார்த்திக் ஆகிய நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை நக்மா. காதலன், மேட்டுக்குடி, பாட்ஷா போன்ற பல ஹிட் படங்களில் நக்மா நடித்துள்ளார். நக்மா தற்போது அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது நக்மாவிற்கு 47 வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லை.

ஷோபனா : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷோபனா. இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞர். சோபனா ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஷோபனாவுக்கு தற்போது 52 வயதாகிறது. தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அனுஷ்கா ஷெட்டி : தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய், சூர்யா, அஜித் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அனுஷ்காவிற்கு தற்போது 40 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாகவே வலம் வருகிறார்.

Continue Reading
To Top