செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விவாகரத்துக்கு பின் அயன் லேடி ஆக மாறிய 5 நடிகைகள்.. பூமர் அங்கிள்சை ஓடவிட்ட அமலா பால்

Tamil Actress divorce feat kollywood: விவாகரத்து என்பது முடிவல்ல தனது வெற்றிப்பாதைக்கான தொடக்கமே  என்று  எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் “கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயில் ஏறி போயாச்சுடி” என்று  சினிமாவில்  வலம்  வரும் இளம் நடிகைகளுக்கான சிறப்பு பதிவு.

சமந்தா:  வித்தியாசமான லுக்கு மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் பல மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்தவர் சமந்தா . ஸ்டார் ஜோடிகளாக வலம்  வந்த நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரின் விவாகரத்து பல சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது சமந்தா, சினிமாவையும் தாண்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார். மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா, நோயுடன் போராடிக் கொண்டே பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். காதல், திருமணம், நோய், சர்ச்சைகள் என பலவற்றையும் எதிர்க்கும் இவர் ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சிங்கப்பெண்மணியே.

அமலா பால்: மைனா படத்தின் மூலம் அறியப்பட்ட அமலாபால்,  இயக்குனர் ஏ எல் விஜய்யை காதல் திருமணம் செய்தார். இருவரின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற பின்னும் வேலையில்லா பட்டதாரி, கடாவர், ஆடை போன்ற படங்களில் தோன்றினார். தற்போது ஜெகத்  தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை  பகிர்ந்துள்ளார். கல்யாணத்துக்கு பின் நடிக்க கூடாது என்று ஏ எல் விஜய் குடும்பம் அவரை பின்னுக்கு தள்ளியது. ஆனால் அந்த பூமர் அங்கிள்களை எல்லாம் ஒதுங்கி போக செய்தார் அமலா பால்.

Also Read:விவாகரத்திற்கு பின்னும் கொடிகட்டி பறக்கும் 3 நடிகைகள்.. அமலாபால் கைவசம் ஒரு டஜன் படங்களா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ரஜினியின் மகள் மற்றும் தனுஷின் மனைவி என தமிழக மக்களால் அறியப்பட்ட ஐஸ்வர்யா. தனுஷின் 3 படத்தின் இயக்குனர் ஆவார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகில் பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற பன்முகம் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ரஜினி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் “லால் சலாம்” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

வனிதா விஜயகுமார்:  சுஜாதா மற்றும் விஜயகுமார் என்ற நட்சத்திர தம்பதிகளின் மகளான வனிதா விஜயகுமார் சினிமாவில் சில படங்களில் தோன்றினாலும் மணவாழ்க்கை அவருக்கு கை கொடுக்கவில்லை. விஜய் டிவியின் பிக் பாஸ், குக் வித் கோமாளி மற்றும் பல ரியாலிட்டி  ஷோக்கல்லில் கலந்துகொண்டு ஹிட் அடித்துள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத அவர் மக்களிடையே எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

எமி ஜாக்சன்: மதராசபட்டினம் படத்தில் அறிமுகமான இங்கிலாந்து மாடல் எமி ஜாக்சன், ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார் இவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகனும் உள்ளார் .தமிழில் தங்கமகன், தாண்டவம், தெறி போன்ற ஹிட் படங்களை கொடுத்த  எமி ஜாக்சன் தற்போது  காதலர் ஜார்ஜை  பிரேக் அப் செய்துள்ளார்.  ஜெய்ப்பூரில் தனது ஹாலிவுட் நண்பருடன் முற்றுகையிட்டுள்ள எமி, ஹிந்தி பட உலகில் தலை காட்டி வருகிறார்.

பெண்கள் விவாகரத்திற்குபின் சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். இதிலும் செலிபிரிட்டி என்றால் கேட்கவா வேண்டும்.  விவாகரத்தின் வலியே அதிகமானது அதிலிருந்து மீள கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று அவர்கள் கெஞ்சும் அளவிற்கு சமூகம் அவர்களை காயப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், விவாகரத்து என்பது தோல்விற்கான அடையாளம் அல்ல வெற்றிக்கான திருப்புமுனை என்று வெற்றி நடை போட தொடங்கியுள்ளனர்.

Also Read:நிம்மதியை தேடி ஊர் ஊராக சுற்றும் சமந்தா.. கடைசியில் சாமியாரிடம் சரணடைந்த புகைப்படம்

- Advertisement -

Trending News