மாட்டிக்கிட்டியே பங்கு.. நடிகையுடன் ஜாலி ட்ரிப் போன சமந்தாவின் Ex கணவர், வசமாக சிக்கிய போட்டோ

Actress Samantha: சமந்தா, நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் இன்னும் சர்ச்சை வளையத்திற்குள் தான் இருக்கின்றனர்.

அதில் நாக சைத்தன்யா பிரபல நடிகை உடன் டேட்டிங் செய்வதாக ஏற்கனவே செய்திகள் வந்தது. ஆனால் இருவரும் மௌனம் சாதித்த நிலையில் தற்போது ஒரு போட்டோ அவர்களின் உறவை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

நாக சைத்தன்யா

naga chaithanya
naga chaithanya

அதன்படி சமந்தாவின் முன்னாள் கணவர் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவை காதலிப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி போல் இந்த விவகாரம் கமுக்கமாக இருக்கிறது.

வசமாக சிக்கிய நாக சைத்தன்யா

இந்நிலையில் இந்த ஜோடி தற்போது வசமாக சிக்கி உள்ளனர். அதன்படி நாக சைத்தன்யா ஜீப்பில் இருக்கும் தன்னுடைய சுற்றுலாத்தள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜீப்பில் செல்லும் சோபிதா

sobitha-actress
sobitha-actress

அதற்கு சோபிதா முதல் ஆளாக லைக் போட்டுள்ளார். அதை தொடர்ந்து அவரும் ஜீப்பில் செல்லும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு போட்டோக்களின் பின்னணி காட்சியும் ஒன்று போல் இருக்கிறது.

இதை வைத்து இவர்கள் டேட்டிங் சென்றுள்ளதை ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வசமா மாட்டிகிட்ட பங்கு என இந்த ஜோடியை கலாய்த்தும் வருகின்றனர்.

இப்படித்தான் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் மாலத்தீவு சென்றனர். ஆனாலும் தனியாக சென்றது போல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்