Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu
நானும் காட்றேன், ஒருத்தனும் பார்க்க மாட்டேங்குறான்.. தயாரிப்பாளர்கள் மீது வருத்தத்தில் நடிகை
பெண்களின் தேசத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகையை வந்த புதிதிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அப்படி ஒரு அழகு என அந்த நடிகையை வர்ணிக்காத ரசிகர்களே கிடையாது.
ரசிகர்கள் மட்டுமல்ல, நடிகர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருமே அந்த நடிகையின் அழகில் சொக்கிப் போய் விட்டனர். இதன் காரணமாக சில முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு கூட வெகு சீக்கிரமே அந்த நடிகைக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் டிவி நடிகருடன் ஜோடி போட்ட அந்த நடிகை தற்போது மற்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். முன்னாடி நல்லா தளதளன்னு இருந்த அந்த நடிகை தற்போது யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை.
உடல் எடையை குறைத்ததால் அவருக்கிருந்த ரசிகர் பட்டாளம் அப்படியே வேறு ஒரு நடிகையை பக்கம் தாவியது. அதுமட்டுமில்லாமல் 27 வயதிலேயே பார்ப்பதற்கு ஆண்டி போலவும் வயசான கிழவி போலவும் அவரது தோற்றம் ஆகிவிட்டது.
இதனால் போகிற பக்கமெல்லாம் பல்லைக்காட்டி பட வாய்ப்பை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகை. முன்னரெல்லாம் கேட்காமல் தானாக வந்த பட வாய்ப்புகள் தற்போது வாய்விட்டு கேட்டாலும் கிடைப்பதில்லை என்பதே அந்த நடிகையின் சோகமாக உள்ளது.
அது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாகவே அந்த நடிகையின் புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமர் கலந்து வெளியாகி வருகின்றன. ஆனாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை அந்த நடிகை மீது படவில்லை. இதனால் எவ்வளவு காட்டியும் கண்டுக்க மாட்டாங்க போல என கவலையில் சுற்றி வருகிறாராம் அந்த நாயகி.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
