Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இங்க மட்டும் குடும்ப குத்து விளக்கு.. அக்கட தேசத்தில் கிளாமரை தெறிக்கவிடும் கீர்த்தி போட்டோஸ்

keerthi-suresh11

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார்.

இதன்பிறகு கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘மகாநதி’ திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளி காட்டியதன் மூலம் தேசிய விருது பெற்றார்.

இதன்பிறகு பல பட வாய்ப்புகளை பெற்று கீர்த்தி சுரேஷ், தன்னுடைய உடல் எடையை குறைத்து முன்பை விட ஒல்லியாக எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டாப்லெஸ் லாங் ஒயிட் கெவின் அணிந்தபடி, பல பல ஆங்கிளில் எடுத்த கிளாமரான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

பெரும்பாலும் தமிழ் படங்களில் கீர்த்தி சுரேஷ் சேலை, பாவாடை தாவணி என குடும்ப குத்துவிளக்காகவே தமிழ் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இவருடைய இதுபோன்ற கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து கதிகலங்கி இருக்கின்றனர்.

keerthi-cinemapettai2

keerthi-cinemapettai

தற்சமயம் கீர்த்தி சுரேஷ் கைவசம் வெறும் மூன்று படங்கள் மட்டுமே இருப்பதால், ஒருவேளை விதவிதமான கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் பட வாய்ப்புகளைப் பெற முடிவெடுத்திருக்கிறார். தமிழில் கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்திலும், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் கீர்த்தி சுரேஷ் தற்போது பதிவிட்டு இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு எக்கச்சக்கமான லைக்களை அவருடைய ரசிகர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் காட்டியிருக்கும் கவர்ச்சிக்காகவே இனி பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

keerthi-suresh-cinemapettai2

keerthi-suresh-cinemapettai2

Continue Reading
To Top