அவன் எல்லாம் ஒரு ஆளா.. 2024 தொடக்கத்தில், வடிவேலுக்கு நடந்த அவமானம்

Actors Ajith and Vadivelu who did not attend Vijayakanth’s funeral: சினிமாவில் பிரபலங்களின் ஸ்டைல் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் என ஒவ்வொன்றையும் உற்று நோக்கி தன் வாழ்விலும் அதனை செயல்படுத்தும் ரசிகர்கள் அவர்கள் செய்த சிறு சிறு தவறுகளையும் விமர்சிக்க தவறுவதில்லை.

2023 ஆண்டு மத்தியில் சிவகார்த்திகேயன் மற்றும் இமானின் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்தது. இனி அவருடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்ற மாட்டேன்!  சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அதிரடியாக அறிவித்தார் இமான்.

பிரபலங்கள் பலரும்  தங்களுக்குத் தெரிந்த வகையில் இப்பிரச்சனைக்கு பதில் கூற இந்த குற்றச்சாட்டிற்கு பதில் ஏதும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார் சிவகார்த்திகேயன்.  மாதங்கள் கடக்க மக்கள் அதை மறந்தும் போயிருந்தனர்.  அயலான் பிரஸ் மீட்டிங்கில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் பிரச்சனையை பற்றி மீண்டும் கூறி அவர் வாயாலயே மாட்டிக் கொண்டார்.

Also read : சமாதிக்கு போனா சந்தி சிரிக்க வச்சுருவாங்களே.! ஜகா வாங்கும் சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய அயலான்

அடுத்ததாக அஜித் மற்றும் வடிவேலு இருவரும் விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கு வராதது இரு ரசிகர்கள் இடையே  மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.  விஜயகாந்த் அவர்கள் நடிகராகவும் தலைவராகவும் தமிழக மக்களுக்கும் நடிகர் சங்கத்திற்கும் பல தொண்டுகள் புரிந்துள்ளார்.

அதை கருத்தில் கொண்டாவது தனது இமேஜ் மற்றும் கொள்கையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றிருக்கலாம் என்று அஜித்தின் ரசிகர்கள் உட்பட பலரும் விமர்சித்தனர். விஜயகாந்தின் இரங்கல் கூட்டத்திற்காவது வந்து தன் மீது விழுந்திருக்கும் கறையை துடைப்பாரா என பார்க்கலாம்.

அஜித்தாவது பரவாயில்லை எப்போதும் வரமாட்டார் இதற்கும் வரவில்லை என்று எடுத்துக் கொண்டாலும்  ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் உடன்  நன்கு பழகி அவரால் வாய்ப்பு பெற்ற வடிவேலு அவர்கள் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது பலரின் எதிர்ப்புகளுக்கும், வாய் பேச்சுக்கும் வடிவேலுவை ஆளாக்கியது. விஜயகாந்தின் இறப்புக்கு வராதவர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல் ஆளாக கலந்து கொண்டது ரசிகர்களிடையே மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் விழா முடிவில் நடிகர் வடிவேலு ஒதுக்கப்பட்ட பேட்டரி காரில் சிவமணியும் அவரது குடும்பமும் ஏறி இது வடிவேலுக்காக ஒதுக்கப்பட்டது என கூறும் போது “அவன்லாம் ஒரு ஆளா” என்று சட்டை செய்யாமல் இறங்க மறுத்து போனாராம். இன்னும் பல அவமானங்கள் வடிவேலுக்கு கலைஞர் நூறில் நடந்ததை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Also read : ரத்தமும் சதையமா இருந்துட்டு இந்த அஞ்சு பேரு சாவுக்கு கூட போகாத வடிவேலு.. விஜயகாந்த் ஆல் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்