சூர்யா, கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ரஜினி, விஜய் எல்லாம் பின்னாடி தான்

Surya, Karthi Net Worth: நடிகர் சிவகுமாரின் வாரிசுகளான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே இப்போது சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அதிலும் சூர்யா நடிப்பில் பல கோடி கல்லாகட்டி வந்தாலும் இதர தொழில்களில் அதிக முதலீடு செய்து வருகிறார். அதில் முக்கியமான ஒன்று தான் அவரது 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்து வரும் நிலையில் பாலிவுட்டில் ஒரு சில படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல் அவரது மனைவி ஜோதிகாவும் சில காலமாக படங்களில் நடிக்காத நிலையில் இப்போது மீண்டும் படு பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மம்முட்டியுடன் மலையாளத்தில் ஒரு படம் நடித்துள்ள நிலையில் ஹிந்திலும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அதேபோல் சூர்யாவின் தம்பி கார்த்தியும் தன்னால் முடிந்த அளவுக்கு சொத்துகளை சேர்த்து வருகிறார். இவ்வாறு சிவகுமாரின் மகன், மகள் என அவரது மொத்த குடும்பத்தின் சொத்தும் பத்தாயிரம் கோடிக்கு அதிகமாக இருக்குமாம்.

Also Read : 4 பிரம்மாண்ட இயக்குனர்களின் ட்ரீம் ப்ராஜெக்ட்டின் ஒரே ஹீரோ சூர்யா.. சிந்தாமல் சிதறாமல் அடிக்கும் ரோலக்ஸ்

இது எல்லோருக்குமே தலையை சுற்ற வைக்கும் விஷயமாகத்தான் இருக்கும். அதாவது விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் ஒரு படத்திற்கு 100 கோடியை தாண்டி அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் அவர்கள் கூட இந்த அளவுக்கு சொத்து வைத்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால் சிவக்குமாரின் குடும்பம் இவ்வளவு செல்வாக்காக இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சூர்யா 150 கோடிக்கு பிளாட் வாங்கி அதில் 30 கோடிக்கு வீடு கட்டி இருக்கிறார். அதிலும் 20 கோடிக்கு ஆறு கார்களை சூர்யா வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு வருமானம் வந்தாலும் அகரம் தொண்டு நிறுவனத்திற்கும் தன்னால் முடிந்த உதவிகளை சூர்யா செய்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு விழாவில் ஜோதிகா கோயில் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்ட உதவி செய்யுங்கள் என மேடையில் பேசி இருந்தார். ஏனென்றால் இப்போது அரசு மருத்துவமனைகள் தரம் இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இப்போது இவ்வளவு சொத்து வைத்திருக்கும் நீங்களே மருத்துவமனை கட்ட உதவலாமே என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : சூர்யாவின் அயன் படத்திற்குள் LCU கான்செப்ட்.. அலப்பறை பண்ணும் நெட்டிசன்கள்