4 பிரம்மாண்ட இயக்குனர்களின் ட்ரீம் ப்ராஜெக்ட்டின் ஒரே ஹீரோ சூர்யா.. சிந்தாமல் சிதறாமல் அடிக்கும் ரோலக்ஸ்

Dream of directors Suriya next 4 projects: டாப் இயக்குனர்கள் நான்கு பேரின் ட்ரீம் ப்ராஜெக்ட் ஆக சொல்லப்படும் படங்களில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த வாய்ப்பு எந்த முன்னணி நடிகருக்கு கிடைக்கும்! ஆனா சூர்யாவின் தான் இந்த 4 முன்னணி இயக்குனர்களின் கனவு படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை கைப்பற்றி இருக்கிறார்.

சூர்யாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் முக்கியமல்ல. தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் நடிக்கக் கூடியவர். இதனாலேயே இவரை நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். சூர்யா தன்னுடைய 43வது படமான கங்குவா படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பார்ப்போரை பயமுறுத்தியது.

அந்த அளவிற்கு சூர்யா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். கங்குவா படத்தை இயக்கும் சிறுத்தை சிவா இந்த படத்தை தன்னுடைய கனவு திரைப்படம் என பெருமிதத்துடன் சொன்னார். அப்படிப்பட்ட இந்த படத்தில் சூர்யா தான் நடிக்க வேண்டும் என படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும்போதே சிறுத்தை சிவா ஆணித்தரமாக முடிவெடுத்தார்.

இவர் மட்டுமல்ல லோகேஷின் கனவு திரைப்படம் ஆன இரும்புக்கை மாயாவி படத்திலும் சூர்யா தான் ஹீரோ. அதேபோல் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மறுபடியும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இன்னொரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படம் சுதா கொங்கராவின் ட்ரீம் ப்ராஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேசிய விருதுகளை வாங்கி குவிக்கும் வெற்றி இயக்குனரான வெற்றிமாறனின் கனவு திரைப்படம் தான் வாடிவாசல். இந்தப் படத்தின் கதாநாயகன் சூர்யா தான். ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகுவதால் இரண்டு காளை மாடுகளுடன் சூர்யா தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் இருக்கும் நான்கு முன்னணி இயக்குனர்களின் கனவு படங்களில் சூர்யா இருப்பதற்கு காரணம் அவருடைய டெடிகேஷன் தான். எந்த படத்தில் அவர் நடித்தாலும் அதற்காக தன்னுடைய முழு ஈடுபாட்டையும் கொடுத்து தரமான படைப்பை உருவாக்கக் கூடியவர். அதனால் தான் இந்த நான்கு பட வாய்ப்பும் சூர்யாவின் மடியில் விழுந்தது.

Next Story

- Advertisement -