வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சூர்யாவின் அயன் படத்திற்குள் LCU கான்செப்ட்.. அலப்பறை பண்ணும் நெட்டிசன்கள்

Lokesh Kanagaraj – Surya: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் LCU கான்செப்டில் சூர்யா இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் 14 வருடத்திற்கு முன்பே சூர்யா நடித்த ரிலீஸ் ஆன படத்தில் லோகேஷின் LCU கான்செப்ட் இருப்பதை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் ட்ரெண்ட் செய்யும் அயன் படத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கே வி ஆனந்த இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் அயன். இந்த படத்தில் சூர்யா கடத்தல்காரர் பிரபுவிடம் வேலை செய்வா.ர் அவர்களுக்கு எதிரியாக அகஷ்தீப் சைக்ஹல் கமலேஷ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் தேவா கேரக்டரில் இருக்கும் சூர்யா பிரபுவிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது போதைப்பொருட்கள் கடத்தும் தொழிலையும் செய்து ரோலக்ஸ் ஆனது போல் கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் அயன் படத்தில் பிரபுவுக்கு உதவியாக இருப்பது போல் கருணாஸ் கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேரக்டரின் பெயர் டில்லி. இந்த கேரக்டரை கைதி படத்தின் கார்த்தியுடன் கனெக்ட் செய்து LCU கான்செப்ட்டை கொண்டு வந்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதேபோன்று பிரபு இந்த படத்தில் தாஸ் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். இதை லியோ படத்தின் ஆண்டனி தாஸ், ஹெரால்ட் தாசுடன் கனெக்ட் செய்திருக்கிறார்கள்.

அயன் படத்தில் சூர்யா பிரபுவிடம் வேலை செய்யும் பொழுது போதை பொருட்கள் கடத்தவில்லை என்றாலும் அதைப்பற்றி அத்தனை தகவலையும் தெரிந்து வைத்திருப்பார். இதனால்தான் சூர்யாவின் அந்த கேரக்டரை விக்ரம் படத்தின் ரோலெக்ஸ் கேரக்டருடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள். சூர்யா விமான நிலையத்தின் அதிகாரி ஒருவரிடம் விசாரணைக்காக சிக்கிக் கொள்வார். அந்த அதிகாரியின் பெயர் பார்த்திபன் என இருக்கும்.

அந்த பார்த்திபன் கேரக்டரை லியோ படத்தின் விஜய் கேரக்டருடன் ஒப்பிட்டு எல் சி யு கனெக்ட் செய்து இருக்கிறார்கள். அந்த அதிகாரி சூர்யாவை விசாரணை செய்யும் பொழுது சூர்யா மரியாதையாக பேசுங்கள் என்று சொல்வார். உடனே அந்த அதிகாரி சூர்யாவை சார் என்று சொல்வார். இதை லியோ படத்தின் கிளைமாக்ஸில் சூர்யா தன்னை எல்லோரும் சார் என சொல்ல வேண்டும் என்று ஒரு வசனம் சொல்லி இருப்பார். அதனுடன் கம்பேர் செய்து இருக்கிறார்கள்.

இந்த வீடியோவை லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யா பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கே அது ஆச்சரியமாகத்தான் இருக்கும். லியோ படம் ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சூர்யாவின் படமான அயனை திடீரென ட்ரெண்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

- Advertisement -

Trending News