சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

அப்பா கோபியை மிஞ்சும் அளவிற்கு போன மகன்.. ரெண்டு பொண்டாட்டி கதையை உருட்டும் பாக்கியலட்சுமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கொண்டு வருவதே வேலையாக இருக்கிறது. கோபியிடம் விட்ட சவாலில் ஜெய்ப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பாக்கியா. அதற்காக 5000 பேருக்கு சமையல் செய்து கொடுக்கும் ஆர்டரை எடுத்து 18 லட்ச ரூபாய் கடனை அடைக்கப் போகிறார்.

இது எப்புட்றா என்று கேட்டாலும் அதுதான் உண்மை, நம்பி தான் ஆக வேண்டும். பொதுவாக படங்களில் ஒரே பாட்டில் பணக்காரர்களாக ஆன மாதிரி பார்த்திருப்போம். இப்போ சீரியலில் ஒரு ஆர்டரை வைத்து மொத்த கடனையும் தீர்க்கப் போகிறார். இதையும் நம்பி தான் ஆகணும், அப்பதான் நாம் தொடர்ந்து சீரியலைப் பார்க்க முடியும்.

Also read: பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்.. பொழப்பு தேடி சீரியலுக்கு வந்த அவலம்

இது ஒரு பக்கம் இருந்தாலும், அப்பா எட்டடி பாஞ்சா பிள்ளைகள் 16 அடி பாய்வாங்க. அது போல தான் கோபி எப்படி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாரோ, அதுபோல தற்போது செழியனும் அந்த இடத்திற்கு போய்விட்டார். இதற்கு காரணம் கோபிக்கு ராதிகா போல, செழியனுக்கு மாலினி. என்னடா இதெல்லாம், இந்த டைரக்டருக்கு ரெண்டு பொண்டாட்டி கதை என்றால் ரொம்ப பிடிக்கும் போல.

செழியனுக்கு கல்யாணமாகி குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரிந்தும் இவரை எப்படியாவது தன் வழியில் சிக்க வைக்க வேண்டும் என்று தேடி தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறார் மாலினி. ஆனால் இதற்கு செழியனாவது அடாவடித்தனமாக ஒரு முடிவை எடுத்து இருக்கலாம். ஒரு நாடகத்தின் மூலம் எப்படி எல்லாம் மக்களுக்கு கெட்டதை திணிக்கணுமோ அதை நன்றாக கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்.

Also read: நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சக்தி.. குணசேகரன் முன் வாய்சவடால் விட்டு டம்மியாக நிற்கும் ஜனனி

ஏற்கனவே படங்களின் மூலம் அவர்கள் பங்குக்கு என்ன செய்யணுமோ அதை நல்லா செய்து வருகிறார்கள். போதாக்குறைக்கு குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நாடகத்திற்கும் இதே நிலைமை தானா. உங்க டிஆர்பி ரேட் கூடுவதற்கு என்னென்ன அல்பத்தனத்தை பண்ணனுமோ அதை பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

இப்பொழுது செழியன் குடித்துவிட்டு வருவதை பாக்கியா கண்டுபிடித்து, நீயும் ஏண்டா உங்க அப்பாவை போல தினமும் குடித்து விட்டு வருகிறாய். உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதை சொல்ல முடியாமல் செழியன் வாயை மூடிக்கொண்டு ரூமுக்கு போய் விடுகிறார். இதை அட்லீஸ்ட் பாக்கியா கண்டுபிடித்து இப்பொழுதே சரி செய்தால் ஜெனியோட வாழ்க்கை நன்றாக இருக்கும்.

Also read: உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

- Advertisement -spot_img

Trending News