செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

செம்பருத்தி ஷபானா பகிர்ந்துள்ள புகைப்படம்.. வாரிசு ஆடியோ லான்ச்சில் கனவை நினைவாக்கிய தருணம்

வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரை தொடர்களில் வாரம் 6 நாட்களும் அவர்களை பார்ப்பதால் நம் வீட்டில் ஒருவராகவே அவர்களை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் தங்களது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஹீரோயின்களை காட்டிலும் அதிக ரசிகர்களைப் பெற்றுள்ளார் செம்பருத்தி சீரியல் ஷபானா. இந்த தொடரில் இவரது பார்வதி கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது. அந்தளவுக்கு பார்வதியாகவே செம்பருத்தி தொடரில் ஷபானா வாழ்ந்திருந்தார்.

Also Read : விவாகரத்து பற்றி முதல் முறையாக வாயை திறந்த ஷபானா.. கண்ணியம் தவறிய நடத்தை என வேதனை

இந்நிலையில் கடந்த ஆண்டு ஷபானா பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ஆக நடித்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இவரை சீரியலில் பார்க்க முடியவில்லை. இப்போது புதிய தொடரில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இப்போது ஷபானா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது ஷபானா தளபதி விஜயின் ஒரு தீவிர ரசிகர் ஆவார். இந்த விஷயத்தை பல மேடைகளில் அவரே சொல்லி உள்ளார். அதுமட்டுமின்றி விஜய் போல் மிமிக்ரியும் செய்து காட்டியுள்ளார்.

Also Read : செம்பருத்தி ஷபானாவின் திருமணம் பெற்றோருக்கு தெரியாதா? இதென்னடா புதுக் கூத்து!

விஜயை ஒரு முறையாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்பதுதான் அவருடைய வாழ்நாள் கனவாக உள்ளது. அது இப்போது நிறைவேறி உள்ளது. அதாவது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஷபானா விஜயுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அண்ணே பார்த்துட்டேன், என்னுடைய கனவு நினைவாகியுள்ளது, விஜயை நேரில் பார்த்த பிறகு அவர் மீது அன்பு 100 மடங்கு அதிகமாகத்தான் ஆகி உள்ளது. அவ்வளவு தான் சொல்வேன் என்று இந்த விஷயங்களை ஷபானா பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜயுடன் செம்பருத்தி சீரியல் ஷபானா

shabana-vijay-cinemapettai

Also Read : தளபதி 67க்கு மொத்த ஃபிளானும் ரெடி.. ஆறு மாசம் அட்ராசிட்டி பண்ண போகும் லோகேஷ், விஜய்

- Advertisement -

Trending News