பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி ஆறு வாரங்கள் கடந்த நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கொண்டு தொடங்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். ஆட்கள் குறைந்து கொண்டே போவதால் வீட்டில் சுவாரசியம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பெரும்பாலான ரசிகர்கள் ஒருவரைப் பார்த்தால் ரொம்ப இரிடேட்டாகுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அவரது பேச்சு மற்றும் நடவடிக்கை பலருக்கும் எரிச்சல் அடைய செய்துள்ளது.
Also Read : ரட்சிதாவை சைட் அடித்ததற்கு இத்தனை கோடியா?. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸில் வாங்கிய சம்பளம்
அதாவது நேற்று கமல் எபிசோடில் ஒரு ரசிகர் மைனா மற்றும் மணிகண்டன் இடையே நட்பை பற்றி பேசி இருந்தார். ஆனால் டாஸ்கிலும் நீங்கள் நட்பாக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதில் மைனா நந்தினி எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதாக நினைத்து எரிச்சல் அடைய செய்கிறார்.
எப்போதுமே வாக்குவாதம், தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுழைப்பது என தொடர்ந்து அவருக்கு கெட்ட பெயர் தான் கிடைத்துள்ளது. வெளியில் இருந்தவரை ஏதோ விஜய் டிவியில் சில நிகழ்ச்சியில் பங்கேற்று காலத்தை கடத்தி வந்தார்.
இப்போது தேவையில்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பல்பு வாங்கி உள்ளார். இவர் கெடுவது மட்டுமல்லாமல் இவரை சுற்றியுள்ளவர்களையும் இவரது கட்டுப்பாட்டிலேயே வைத்து அவர்களையும் விளையாடவிடாமல் வைத்துள்ளார். இதனால் அவர்களின் தனித்திறமை வெளியில் வராமல் உள்ளது.
ஆகையால் மைனாவை முதலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என ரசிகர்கள் கோஷமிட்டு வருகிறார்கள். எனவே இந்த வார நாமினேஷனில் மைனா நந்தினி இடம்பெற்றால் கண்டிப்பாக இவர் தான் வெளியேறுவார் என பலரும் கூறிவருகிறார்கள். இதனால் இன்று நாமினேஷனில் மைனா இடம் பெறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read : பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி