விஜய் சேதுபதி பெயரைக் சந்தி சிரிக்க வைத்த பிரபலம்.. கேடுகெட்ட வேலையை செய்த காமெடியன்

விஜய் சேதுபதி விடா முயற்சியால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இப்போது மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்துடன் இருக்கிறார். எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும் முதலில் இருந்த அதே பண்புடன் தற்போது வரை விஜய் சேதுபதி பயணித்த வருகிறார்.

இதனால் தான் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் ஃபர்சி என்ற வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, ராசி கன்னா, ஷாகித் கபூர், ரெஜினா கசாண்ட்ரா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர்.

Also Read : சம்பளத்தை உயர்த்தி கேட்ட விஜய் சேதுபதி.. அந்தர்பல்டி அடித்து இயக்குனரை ஹீரோவாக்கிய முதலாளி

இந்த வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கள்ள நோட்டு அச்சிடிப்பவர்களை போலீசார் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது தான் இந்த தொடரின் மொத்த கதை. ஆனால் இந்த படத்தில் சில மோசமான காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி பணத்திற்காக இவ்வளவு இறங்கி கெட்ட வார்த்தைகள் பேசி உள்ளாரா என பலரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தது. ஆனால் விஜய் சேதுபதி இப்படி கேடுகெட்ட கெட்ட வார்த்தைகளை பேசவில்லையாம். இதற்கெல்லாம் காரணம் விஜய் டிவி பிரபலம் ஒருவர் தான்.

Also Read : தோல்வி பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. கதையே கேட்காமல் கொடுத்த வாக்குறுதி

அதாவது விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டி எஸ் கே  இவருடைய அடையாளமே விஜய் சேதுபதியின் உடல் மொழியை அப்படியே கொண்டு வருவார். இந்நிலையில் ஃபர்சி வெப் சீரிஸிலும் விஜய் சேதுபதிக்கு இவர்தான் டப்பிங் பேசி உள்ளார்.

விஜய் சேதுபதி பெயரை கெடுக்கும் அளவிற்கு இவ்வளவு மோசமான வார்த்தைகளை பேசி நாரடித்து விட்டார். ஆனால் இந்த வார்த்தைகளை விஜய் சேதுபதி தன் வாயால் பேசவில்லை என்றாலும் இப்படி நடிக்க ஏன் சம்மதித்தார் என்ற குழப்பமும் ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

Also Read : விஜய் சேதுபதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலைமை