முழுநடிகனாய் மாறிய ஒளிப்பதிவாளர்.. மங்குனி அமைச்சராக நடிப்பில் பட்டையை கிளப்பிய இளவரசுவின் 5 படங்கள்

ஆரம்ப காலகட்டத்தில் கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் தான் இளவரசு. அதன்பின் சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்தார் இன்று ஒரு பெரிய கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக வளர்ந்து நிற்கிறார்.

கலகலப்பு: சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படம் வெளிவந்தது. இதில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி, சந்தானம் மற்றும் இளவரசு ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. இதில் இளவரசு  விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களுடன் கலந்து வணிகரீதியாக வெற்றி பெற்றது.

Also read: ஒளிப்பதிவு மூலம் அசத்திய இளவரசு.. ரசிகர்களை பிரமிக்கச் செய்த 5 படங்கள்

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி: சிம்பு தேவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்தது. இப்படத்தில் வடிவேலு, மோனிகா, தேஜாஸ்ரீ, நாசர், இளவரசு மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த படம் பிறக்கும்போதே பிரிந்த இரட்டை சகோதரரின் கதையை சொல்கிறது. இதில் இளவரசு மங்குனி பாண்டியனாக நடித்திருப்பார். இவர் வடிவேலுடன் சேர்ந்து வரும் காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக நகைச்சுவையாக நடித்திருப்பார்.

சதுரங்க வேட்டை: எச்.வினோத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் நட்ராஜ், இஷாரா நாயர், பொன்வண்ணன் மற்றும் இளவரசு ஆகியோர் நடித்தார்கள். இப்படம் மோசடி மற்றும் ஆள் மாறட்டும் மூலமாக மக்கள் ஏமாறுவதை ஒரு விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் இளவரசு செட்டியாராக நடித்திருப்பார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சனமாகவும் பெரிய அளவில் வெற்றி படமாக மாறியது.

Also read: 5 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இளவரசு.. ஒவ்வொரு படமும் வேற ரகம்

முத்துக்கு முத்தாக: ராசு மதுரவன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு குடும்பத்தை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இளவரசு, சரண்யா பொன்வண்ணன், நடராஜ், பிரகாஷ், விக்ராந்த், ஓவியா, மோனிகா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் குடும்பத்தில் உள்ள உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இக்காலகட்டத்திற்கு கூட்டுக் குடும்பத்திற்கான முக்கியத்துவத்தையும் சொல்லும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும். இதில் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து குடும்பங்களில் ஒருவராக வாழ்ந்து வந்தார் என்றே சொல்லலாம்.

நெஞ்சுக்கு நீதி: அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் உதயநிதி, ஆரி அர்ஜுனன்,தன்யா ரவிச்சந்திரன், மற்றும் இளவரசு ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தியாவில் உள்ள ஜாதி அமைப்புக்கு எதிராக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி தாக்குதலைத் தொடங்குவதைச் சுற்றி படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் இளவரசு சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றது.

Also read: அப்பாவாக நடித்து அதிக கைதட்டல் வாங்கிய 8 ஹீரோக்கள்.. முதல் இடத்தைப் பிடித்த சேனாதிபதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்