விடுதலை ஒரு டப்பா படம்.. முயற்சி இல்லாத இயக்குனர் என கோபத்தில் பேசிய பிரபலம்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி, ஹீரோவாக அவதாரம் எடுத்த படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் அப்பட்டமான கதை திருட்டு என வழக்கறிஞரும் எழுத்தாளருமான பிரபலம் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். எழுத்தாளர் இரா. முருகவேள் விடுதலைப் படம் பற்றி பேசியுள்ளார். வெற்றிமாறன் மற்ற நாவல்களில் இருந்து கதைகளை எடுத்து ஏமாற்றியுள்ளார். 

Also Read: சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

இது ஜெயமோகன் எழுதிய கதை என்று கூறப்பட்டாலும், பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி என்ற நாவலில் இருந்தும், இன்னும் பல நாவலில் இருந்தும் கதைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் உரிமை வாங்கவில்லை. அனைத்து நாவல்களில் இருந்தும் எல்லாத்தையும் கலந்து விடுதலை படத்தை எடுத்துள்ளார். 

வெற்றிமாறன் யாரிடமும் உரிமை கேட்காமல் திருட்டுத்தனமாக அனைத்தையும் செய்துள்ளார். பல்வேறு கால கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை தவறாக சித்தரித்து மக்களை ஏமாற்றியுள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தின் மூலம் மக்களையும் குழப்பி உள்ளார். இது நிறைய பேருக்கு தெரியவில்லை.

Also Read: 6வது வெற்றியை கொடுக்குமா வெற்றிமாறனின் விடுதலை.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஆனால் உண்மையான எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாக தெரியும். அதனால் இந்த படம் வெற்றிமாறனின் முயற்சி இன்மைன்யை காட்டுகிறது. முக்கியமாக இந்த படம் ஒரு டப்பா படம் என எழுத்தாளர் இரா. முருகவேள் கோபத்தில் வெற்றிமாறனை திட்டி தீர்த்திருக்கிறார். மேலும் இந்த கதை திருட்டிற்கு ஜெயமோகனுக்கு பங்கு இருக்காது என்று நினைக்கிறேன்.

வெற்றிமாறன் இன்னொருவர் கதைக்கு தன் பெயரை போடும்போது கொஞ்சம் கூட கூசவில்லையா!. இதையெல்லாம் தெரிந்தும் பாசாங்கு செய்து, விடுதலை படத்தை குறித்து அவர் பேட்டிகளை கொடுத்து வருவது சுயமரியாதை அற்ற தன்மையை காட்டுகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Also Read: முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்