மாஸ்டருக்கு பின் சூப்பர் ஸ்டாருக்கு கதை சொன்ன லோகேஷ்.. வாய்ப்பு கொடுக்காமல் போனதற்கு இதான் காரணம்!

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 20 நாட்களில் மட்டும்  விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் 165 கோடியையும், சர்வதேச அளவில் 385 கோடி வசூலை தாண்டி கூடியவிரைவில் 400 கோடி உடன் பாக்ஸ் கலெக்ஷனை பெறவுள்ளது.

விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இன்னிலையில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். லோகேஷ் கனகராஜ் சினிமாவில் வருவதற்குக் காரணமே கமலஹாசன் இயக்கிய திரைப்படங்களும் அவரது நடிப்பு பார்த்துதான் ஆர்வம் வந்ததாக கூறினார்.

மாஸ்டர் படத்தை இயக்கிய பிறகு ரஜினிகாந்த் அவர்கள் லோகேஷ் கனகராஜ் அழைத்து வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும் அப்போது ரஜினிகாந்திற்கு லோகேஷ் கனகராஜ் படத்திற்கான கதையை கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் படத்தின் கதை நன்றாக இருக்கிறது நடிக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் மாஸ்டர் படம் வெளியானதற்கு பின்பு கொரோவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனால் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் உருவாவதாக இருந்தது. ஆனால் கொரோவின் பரவல் மற்றும் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்