வலிமை படத்தை 300 கோடிக்கு கேட்ட நெட்ப்ளிக்ஸ்.. போனி கபூர் சொன்ன பதில்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. 3 வருடமாக வலிமை படத்திற்காக இவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் வருகிற பொங்கல் அன்று வலிமை படம் வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல படங்களும் வெளியாக தயங்கும் நிலையில் வலிமை படம் மட்டும் சோலோவாக திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனால் தற்போது அஜித் குமார் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஆனால் இப்படத்திற்கு 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

ஆனால் சமீபத்தில் வலிமை படம் வெளியாகுமா ஆகாதா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில் வலிமை படம் பொங்கலன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்து பல பிரபலங்களும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

தற்போது வலிமை படத்தை 300 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் படத்தை தற்போது OTT-க்கு கொடுக்கவில்லை எனவும் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் அதன்பிறகு OTTயில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு என தகவல் கிடைத்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகைக்கு வலிமை படம் கேட்டும் வலிமை படத்தை படம் கொடுக்காததற்கு காரணம் அஜித் தனது ரசிகர்கள் 3 வருடமாக வலிமை படத்திற்காக காத்திருக்கிறார்கள் அதனால் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என அஜீத் கூறியுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை எனவும் முதலில் திரையரங்கில் வெளியாகும் அதன் பிறகு வேண்டுமானால் OTT யில் கொடுக்கலாம் என கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பொங்கலன்று வலிமை படத்தை கொண்டாடுவதற்கு அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்