சார்பட்டா பரம்பரை சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் இவ்வளவு கோடியா? கலைஞர் டிவி இஸ் பேக்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் அமேசான் தளத்திற்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்ததுதான் இந்த படத்தின் வெற்றி எனவும் கூறுகின்றனர். அதோடு ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கி விட்டார் என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆர்யாவுக்கும் இந்த படம் மார்க்கெட் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. தற்போது திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சார்பட்டா பரம்பரை படத்தை தியேட்டரில் போட்டாலும் பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.

ஆனால் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி விட்டதால் தியேட்டரில் வெளியிட வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்களாம். மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி அல்லது விஜய் டிவி போன்ற பெரிய நிறுவனங்கள் தான் வாங்குவார்கள் என எதிர்பார்த்தனர்.

ஆனால் யாரும் சற்றும் யோசிக்காத வகையில் கலைஞர் டிவி சார்பட்டா பரம்பரை படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ளது. அதுவும் சுமார் ஏழரை கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். ஆர்யா இதுவரை நடித்த படங்களின் சேட்டிலைட் உரிமைகளை விட இந்தப் படம் பல கோடிகளை அதிகமாக பெற்றுள்ளதாம்.

மேலும் வருகின்ற ஆயுதபூஜைக்கு சார்பட்டா பரம்பரை படத்தை டிவியில் ஒளிபரப்ப உள்ளார்களாம். கலைஞர் டிவி கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் பலரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு நல்ல நல்ல டிரெண்டிங் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்பி வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

sarpatta-movie-cinemapettai
sarpatta-movie-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்