லைக்காவின் அபராத தொகையை விஷால் என்ன செய்தார் தெரியுமா.? என்ன ஒரேடியாக இப்படி மாறிட்டாரு.!

ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷால், 2004ல் வெளியான ‘செல்லமே’ படத்தின்மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். 2013ல் அவர் நடிப்பில் வெளியான பாண்டியநாடு படத்தின்மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக ‘துப்பறிவாளன்’ படம் தவிர்த்து வேறு எந்தப்படமும் ஓடவில்லை. விஷால் பிலிம் பேக்டரி மூலம் இதுவரை 9 படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சக்ரா’. அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெசான்ட்ரா நடிப்பில் வெளியான இப்படம் தோல்வியை தழுவியது.

இப்படத்திற்காக கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக விஷால் மீது வழக்கு தொடர்ந்தது லைக்கா நிறுவனம். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொய்வழக்கு எனக்கூறி தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனம், விஷாலுக்கு 5 லட்சம் அபராதம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதுகுறித்து பேசிய விஷால், ‘நீதி வெல்லும், உண்மை வெல்லும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். லைக்கா நிறுவனம் எனக்கு எதிராகவும்,’சக்ரா’ படத்திற்கு எதிராகவும் தாக்கல் செய்த வழக்கு, பொய் வழக்கென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரு பொய்யான வழக்கை முன் வைத்து என் மீது குற்றம் சாட்டியதற்காக லைக்கா நிறுவனத்திற்கு ரூ.5லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’, என தெரிவித்தார். வழக்கு செலவாக 5 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த பணத்தை ஏழை எளிய மக்களின் கல்வி செலவிற்கு வழங்க விஷால் முடிவெடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆண்டுதோறும் தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை மக்களின் படிப்பிற்கு உதவி செய்வேன். தற்போது இந்த அபராதத்தொகை 5 லட்சத்தையும் தேவி அறக்கட்டளை மூலமாக ஏழை மக்களின் கல்விக்கு வழங்க உள்ளேன்’ என கூறியுள்ளார்.

vishal-cinemapettai
vishal-cinemapettai

விஷாலின் இந்த செயலுக்காக அவருக்கு பாராட்டுக்கள் வந்து குவிகிறது. சினிமா உலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்