பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய் சேதுபதி பட நடிகை.. யார் தெரியுமா?

மக்களை எண்டர்டெயின் செய்யும் விதமாக விஜய் டிவியில் பலவிதமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இவை அனைத்துமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் ரசிகர்களுக்கு விருப்பமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் சீசன் 4 முடிவடைந்த நிலையில் தற்போது சீசன் 5 எப்போது தொடங்கும் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி சீசன் ஐந்தில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த வாரம் சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். கமலுக்காகவே இந்நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் விஜய் சேதுபதியின் தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் பிரபலமான நடிகை வசுந்தரா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று படத்தை தொடர்ந்து வசுந்தரா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

vasundhara kashyap
vasundhara kashyap

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் திணறி வருவதால் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. முன்னதாக சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஜான் விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்