ஸ்கூல் யூனிபார்ம் போட்டு க்யூட்டாக இருக்கும் பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் பள்ளி கால புகைப்படம்

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்(Priya Bhavani Shankar).

இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.

தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

பிரியா பவானி சங்கர் மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் அழகான புகைப்படங்களை வெளியிட்டு தினமும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய பள்ளி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்போதே அவருக்கு மூக்கு புடைப்பாக இருந்ததாக புகைப்படத்தை ரசிகர்கள் ஜாலியாக கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

priya-bhavani-shankar-school-photo
priya-bhavani-shankar-school-photo
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்