விக்ரமை சீண்டிப்பார்க்கும் சிம்பு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரிலீஸ் தேதி

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு திரையரங்குகள் மெல்ல மெல்ல புத்துணர்வு பெற்று வருகின்றன. திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு வரிசையாக திரைப்படங்கள் திரையரங்குகளில்  ரிலீஸ் ஆனாலும், மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது.

மேலும் இதனை தொடர்ந்து  தியேட்டர்களில் ரிலீஸாகும் படங்களை காணவரும் மக்களின் கூட்டம் கணிசமாகவே உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வருகின்ற மே 14ஆம் தேதியான ரம்ஜான் அன்று தியேட்டர்களில் இரண்டு பிரம்மாண்ட படைப்புகள் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது சியான் விக்ரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிக அளவு பெற்ற படம்தான் ‘கோப்ரா’. இந்தப் படத்தை லலித்குமார் செவன் ஸ்கிரீன்  ஸ்டுடியோ சார்பில் தயாரிக்கிறார்.

அதேபோல், இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் எதிர்மறை வேடத்தில் நடிப்பதாகவும், ஸ்ரீநிதி, சக்தி, கே எஸ் ரவிக்குமார், ரோபோ ஷங்கர், மிருணாளினி ரவி, முகமது அலி, கனிகா, பாபு ஆண்டனி போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிகிறது. இந்த படம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் விடுமுறை நாட்கள் என்பதால் வருகின்ற ரம்ஜான் ( மே 14ஆம் ) அன்று ரிலீசாக உள்ளதாம்.

cobra-maanadu
cobra-maanadu

இது ஒரு புறமிருக்க சிம்புவின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாநாடு’ படத்தின் ரிலீசுக்காக அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, கல்யாணி பிரியன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், பிரேம்ஜி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்  படமும் வருகின்ற மே 14-ஆம் தேதி ரம்ஜான் அன்று ரிலீசாக உள்ளதாம்.

ஆகவே மே மாதம் ரிலீசாக உள்ள இந்த இரண்டு பிரம்மாண்ட  படைப்புகளுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளதாகவும், இரண்டில் எது வசூல் சாதனை புரிய உள்ளது என்பதை காணவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்