இசை உலகின் போதை மன்னன் யுவன்.. இன்றுவரை இசைக்காக கொண்டாடப்படும் அந்த ஏழு படங்கள்

Yuvan Shankar Raja Birthday: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தன்னுடைய 39 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் மேற்கத்திய இசை, ஹிப் ஹாப், ரீமிக்ஸ் போன்ற புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது இவர் தான். தன்னுடைய 16 வது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். இன்று இளைஞர்கள் கொண்டாடும் இசையின் நாயகனாக இவர் இருக்கிறார். எத்தனை இசையமைப்பாளர்கள் தற்போது இருந்தாலும், யுவனின் பாடலுக்கு என்று இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறார்கள். இவருடைய பாடலுக்காகவே குறிப்பிட்ட இந்த ஏழு படங்கள் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.

பூவெல்லாம் கேட்டுப்பார்: தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா முதன் முதலில் இணைந்து நடித்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இதில் வரும் அத்தனை பாடல்களுமே இந்த தம்பதிகளுக்காகவே எழுதப்பட்டது போல் தான் இருக்கும். யுவன் சங்கர் ராஜா இசையில் சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, இரவா பகலா குளிரா வெயிலா, செஞ்சொரீட்டா, செவ்வானம் வெட்கம் கொண்டது போன்ற பாடல்கள் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

Also Read:இளையராஜாவுக்கு இசைஞானி பட்டத்தை கொடுத்த தலைவர்.. 2K கிட்சை கூட ராகம் போட வைத்த இசை கடவுள்

துள்ளுவதோ இளமை: இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமாகியது துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தான். இவர்களுடைய வெற்றிக்கு மிகப்பெரிய வித்திட்டவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தின் வெற்றிக்கு இதன் பாட்டுக்கள் தான் காரணம் என்று கூட சொல்லலாம். யுவன் இசையில் நெருப்பு கூத்தடிக்குது, இது காதலா முதல் காதலா, வயதே வா வா சொல்கிறதே போன்ற பாடல்கள் அப்போது இளைஞர்களின் தேசிய கீதம் ஆகவே இருந்தது.

காதல் கொண்டேன்: குறிப்பிட்ட காலத்திற்கு, இயக்குனர் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் தான் யுவன் சங்கர் ராஜா. தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் அடுத்த ஹிட் ஆக வெளியான காதல் கொண்டேன் படத்தில் யுவனின் இசை தான் மொத்த அடித்தளமாக இருந்தது என்று கூட சொல்லலாம். இந்த படத்தில் தொட்டுத் தொட்டு போகும் தென்றல், தேவதையை கண்டேன், நெஞ்சோடு கலந்திடு போன்ற பாடல்கள் கேட்பவர்களை கலங்கடிக்க செய்வது போல் இருக்கும்.

7 ஜி ரெயின்போ காலணி: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இணைந்து நடித்த படம் 7ஜி ரெயின்போ காலணி. இந்த படத்தில் இருந்து யுவனின் இசையை எடுத்து விட்டால் எதுவுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு படத்தோடு ஒன்றி போய் இருந்தது பாடல்கள். இந்த படத்தில் வரும் நினைத்து நினைத்து பார்த்தால், கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை, ஜனவரி மாதம் போன்ற பாடல்கள் இன்றுவரை அனைவரது பேவரைட் ஆகவும் இருக்கிறது.

Also Read:படம் நல்லா இல்ல, வெளியிட்டா மூணு நாளு கூட ஓடாது.. இளையராஜாவை மீறி ஹிட் கொடுத்த இயக்குனர் இமயம்

புதுப்பேட்டை: நடிகர் தனுஷ் நடித்து, செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதை களமாக இருந்தது. இப்படி ஒரு கதை களத்திற்கு இசையமைப்பாளர் யுவன் மட்டுமே இசையமைக்க முடியும் என்பதைப் போல் படத்தின் பாடல்கள் அமைந்திருந்தன. எங்க ஏரியா உள்ள வராத, ஒரு நாளில் வாழ்க்கை, புல் பேசும் பூ பேசும் என்ற பாடல்கள் பயங்கர ஹிட் அடித்தன.

சென்னை 28: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளம் ஹீரோக்களை வைத்து ரொம்பவும் ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு படம் தான் சென்னை 28. படத்தின் கதைக்களத்திற்கு ஏற்றவாறு யுவன் சங்கர் ராஜாவும் ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் படி இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் யாரோ யாருக்குள் யாரோ, சரோஜா சாமானிகாலோ, வாழ்க்கையை யோசிங்கடா போன்ற பாடல்கள் இளைஞர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

கற்றது தமிழ்: இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்த வெளியான கற்றது தமிழ் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும், இந்த படத்தின் பாடல்கள் இன்றுவரை பசுமை மாறாத நினைவாக மனதில் இருக்கின்றன. யுவன் இசையில் பறவையே எங்கு இருக்கிறாய், உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது, பற பற பட்டாம்பூச்சி போன்ற பாடல்கள் மனதை வருடும் விதமாக இருக்கும்.

Also Read:ரஜினி, இளையராஜா கூட்டணியில் வெற்றி கண்ட 6 பாடல்கள்.. ஒரே ஒரு பாட்டில் மொத்தமாய் ஸ்கோர் செய்த சூப்பர் ஸ்டார்

- Advertisement -spot_img

Trending News