எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவான 6 பேர்.. நம்பியாரின் இன்னொரு முகம்

Gentlemen Actors : தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை படத்தின் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களே அதிகம் வெளிவருகின்றன. அந்த வகையில் ஹீரோக்களும் பல ஹீரோயிசங்கள் செய்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில நடிகர்கள் மட்டும், தங்களின் நிஜ வாழ்க்கையிலும் ரியல் ஹீரோக்களாகவே வாழ்கின்றனர். அந்த வகையில் 70களில் இருந்து இன்று வரை ஒரு சில நடிகர்கள் தங்கள் படங்களில் எந்த ஒரு கேரக்டர் ஏற்று நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் ஜென்டில்மேன்களாகவே திகழ்கின்றனர். அப்படி தனித்தன்மை வாய்ந்த சில நடிகர்களை பற்றிக் காண்போம்.

எம். என். நம்பியார் : பல சூப்பர் டூப்பர் வில்லன்கள் இருந்தாலும், எம். என். நம்பியார் வில்லத்தனத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. 1946 ஆம் ஆண்டு நம்பியார் நடித்து வெளிவந்த முதல் படம் வித்யாபதி. ராஜகுமாரி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் உடன் முதன்முதலாக இணைந்து நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துத்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லன் என்றாலும் சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற மற்ற நடிகர்களுக்கும் வில்லனாகவும் நடித்துத்திருக்கின்றார். வில்லன் வேடங்களில் அதிகம் நடித்த இவர் நிஜ வாழ்க்கையில் அசல் நாயகனாகவே வாழ்ந்து வந்தார். தொடர்ந்து 65 ஆண்டுகள் புனித யாத்திரை சென்று வந்த சிறந்த ஐயப்ப பக்தர் இவர். தினமும் இடைவிடாது யோகா,100 சூரிய நமஸ்காரங்கள் ஆகியவை செய்து தன் உடம்பை ஃபிட்டாக வைத்திருந்தார் எம். என். நம்பியார்.

Also Read : ஒரே பாட்டை வைத்து கலாய்த்து தள்ளிய எம்ஜிஆர், நம்பியார்.. சிவாஜி கணேசனுக்கு கொடுத்த ஓவர் டார்ச்சர்

சிவக்குமார் : திரையுலக மார்க்கண்டேயன் என்ற சிறப்பு பெயருடன் 80 வயது தாண்டியும் உற்சாகமாக வளம் வருபவர் நடிகர் சிவகுமார். திரை துறையில் தனக்கென ஓரிடத்தை தக்கவைத்துக் கொண்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் சிவக்குமார். சிறந்த ஓவியர், பேச்சாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர் இவர். 64 வயது வரை படங்களில் நடித்து வந்த சிவகுமார் ஒரு சிறந்த பேச்சாளராக தன்னை மெருகேற்றிக் கொண்டார். ஒரு மனிதன் உடல் ரீதியாக வளமாக இருக்க குடி சிகரெட் பழக்கம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவார். காபி, டீ கூட குடிக்காமல் யோகா பயிற்சிகளை தீவிரமாக செய்து வந்தவர் சிவகுமார். 80 வயது தாண்டியும் அடிப்படை யோகா மற்றும் நடைப்பயிற்சிகளை செய்து வருவதால் மனரீதியாக தான் பலம் பெற்று வருவதாக கூறுகின்றார்.

ஜெய்சங்கர் : 1965 இல் இரவும் பகலும் என்ற படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் நடிகர் ஜெய்சங்கர்.  மக்கள் கலைஞர் என்று அழைக்கப்பட்டார் இவர், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் படங்களை ரிலீஸ் செய்து வந்தமையால் வெள்ளிக்கிழமை நாயகன் என்று ஆனார். வல்லவன் ஒருவன். சிஐடி சங்கர் போன்ற ஆக்ஷன் படங்களின் நடித்து தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஆனார் ஜெய்சங்கர். நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் காமெடி படங்களிலும் தன்னுடைய முத்திரையை பதிக்கவும் இவர் தவறியதில்லை. அதேபோல் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த அளவிற்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் சத்தம் இல்லாமல் செய்தார் ஜெய்சங்கர். மருத்துவ டிரஸ்ட் ஒன்றை அமைத்து அதன் மூலம் பலருக்கு சிகிச்சையும் அளித்து வந்தார்.இவர் 61 வயது வரை சமூகப் பணிகளும் நடிப்பிலும் தொடர்ந்து பணிபுரிந்து ஜென்டில்மேன் எனப் பெயரெடுத்தார்.

Also Read : பெரிய நடிகர் என்று சிவக்குமார் ஒத்துக் கொண்ட 2 ஹீரோக்கள்.. யாராலும் மறுக்கவும், மறக்கவும் முடியாது

விஜயகாந்த் : தனது அதிரடி ஆக்ஷ்ன் படங்களால் மக்களைக் கவர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறந்த நடிகராக கலைமாமணி, ஃபிலிம் ஃபேர் விருதுகளை பெற்ற இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். ஏழை எளிய மக்களுக்கு பல நல உதவிகளை வழங்கி வருகின்றார். நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை கட்டணம் ஏதுமின்றி தனது பொறியியல் கல்லூரியிலேயே இலவசமாக படிக்கச் செய்துள்ளார். இது போன்ற உதவிகளை செய்து வந்த விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து கட்சி மூலமாகவும் பல உதவிகளை செய்து உள்ளார். 2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2011ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.

அருண் பாண்டியன் : 1985 விசுவின் நகைச்சுவை திரில்லர் படமான சிதம்பர ரகசியம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியன். ஆபாவாணின் ஊமை விழிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் இவர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பல முகங்களை கொண்டு இன்று வரை திரையுலகில் பவனி வருபவர். ஐங்கரன் இன்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கின்றார் அருண் பாண்டியன். இவர் 2011 ஆம் ஆண்டு பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். இவர் தமிழ்நாடு பில்லியட்ஸ் மற்றும் ஸ்னூகர் சங்கத்தின் தலைவராகவும் அகில இந்திய பில்லியட்ஸ் மற்றும் ஸ்னூகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றார்.

அஜித் : அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அஜித். 2002இல் அவர் நடித்த தீனா வெளியாகி பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்ற பிறகு தல என்று ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல், பல நல உதவிகளை செய்துள்ளார் அஜித். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி 2013-ஆம் ஆண்டு சென்னை முதல் பெங்களூர் வரை 2014 ஆம் ஆண்டு பூனே முதல் சென்னை வரைவிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார். 2018 ஆம் ஆண்டு மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ட்ரான் விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளார். தக்ஷ் என்ற குழு உடன் இணைந்து ஆஸ்திரேலியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் முதல் பரிசு வென்றுள்ளார். உலகளவில் புகழ்பெற்ற ஒரு F1 ரேசர் ஆவார். அண்ணா பல்கலைக்கழக ஆசிரியராகவும், 2018 ஆம் ஆண்டு தமிழக மாநில அளவில் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று புகழ்பெற்றுள்ளார்.

Also Read : விடாமுயற்சிக்காக உடம்பை சரமாரியாக குறைக்கும் அஜித்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்