விடாமுயற்சிக்காக உடம்பை சரமாரியாக குறைக்கும் அஜித்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

Actor Ajith Latest Photo: அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு முட்டுக்கட்டையாக சில விஷயங்கள் இருந்து வருகிறது. அதாவது விக்னேஷ் சிவன் இந்த படத்தில் ஒப்பந்தமாகிய பிறகு சில காரணங்களினால் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

அதன் பிறகு மகிழ்திருமேனியை லைக்கா நிறுவனம் லாக் செய்தது. ஆனால் அஜித்தின் பிறந்தநாள் அன்று விடாமுயற்சி என்ற டைட்டில் மட்டுமே விடப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அப்சட்டில் இருக்கிறார்கள்.

Also Read : பட வாய்ப்புக்காக நாய்க்குட்டியை தூக்கிட்டு நாலு நாள் அலைந்து திரிந்த எஸ் ஜே சூர்யா.. சுக்கு நூறாக உடைந்து போன அஜித்

ஆனால் சமீபகாலமாக அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் உலாவ தொடங்கியது. அதன்படி துணிவு படத்திற்கு பிறகு அஜித் உடம்பை குறைத்து வருவது நன்றாக தெரிகிறது. அதுவும் இப்போது வெளியாகியிருக்கும் படத்தில் மிகவும் ஸ்லிம்மாக அஜித் காட்சி அளிக்கிறார்.

விடாமுயற்சி படத்திற்காக தான் தற்போது அஜித் உடம்பை சரமாரியாக குறைத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தனது குடும்பத்துடன் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் விடாமுயற்சி அப்டேட் கொடுக்குமாறு கேட்கிறார்கள்.

Also Read : ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்

மேலும் அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு படம் வெளியானது. இப்போது தளபதி அடுத்ததாக லியோ படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தளபதி 68 படத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். ஆனால் அஜித் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பை கூட தொடங்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் ஒரு தரமான கெட்டப்காக தான் இந்த பிரேக் எடுக்கப்பட்டிருக்கிறார் அஜித் என்று தெரிகிறது. கண்டிப்பாக தனது ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக விடாமுயற்சி படத்தை கொடுக்க அஜித் முற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் வரும் என்று நம்புவோம்.

ajith
ajith

Also Read : மாசக்கணக்கில் காக்க வைத்த விடாமுயற்சி.. 13 வருடங்களுக்குப் பிறகு டபுள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்