இப்பவும் டிவியில் போட்டா டிஆர்பி எகிறும் கேப்டனின் 6 படங்கள்.. 100வது படத்தில் மகுடம் சூட்டிய விஜயகாந்த்

Vijaykanth Best 6 Movies: முக்கால்வாசி சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள் ரீல் ஹீரோவாகத் தான் இருப்பார்கள். ஆனால் நிஜத்திலும் சரி, படத்திலும் சரி ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் கேப்டன் என்கிற அங்கீகாரத்தை பெற்று அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர்தான் விஜயகாந்த். அப்படி ஹீரோவாக நடித்த படங்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் இப்பவும் டிவியில் போட்டால் டிஆர்பி எகிறும் என்பதற்கு ஏற்ப கேப்டனின் 6 படங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.

கேப்டன் பிரபாகரன்: விஜயகாந்த் வெற்றியை தான் காட்ட வேண்டும், வலியை காட்டக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். அதனால் ரோப் கட்டி நடிக்கும் சண்டைக்காட்சியில் இவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தையும் பொருட்படுத்தாமல் இயக்குனரையும், தயாரிப்பாளர்களையும் நஷ்டப்படுத்த கூடாது என்ற ஒரு நல்ல எண்ணத்தில் அந்த காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் நிஜ ஹீரோ என்ற காரணத்திற்காக நூறாவது படமான இப்படத்தின் மூலம் கேப்டன் என்று மகுடம் சூட்டப்பட்டது.

புலன் விசாரணை: ஆர் கே செல்வமணி, மணிவண்ணிடம் உதவி இயக்குனராக இருந்த பொழுது முதல் முறையாக இயக்குனராக பயணிக்க தொடங்கினார். அப்பொழுது சத்யராஜ் இடம் கதை சொல்லி நடிக்க கேட்ட பொழுது, அவர் அறிமுக இயக்குனரிடம் நான் நடிப்பதற்கு ஈஷ்டம் இல்லை என்று கூறிவிட்டார். அதன் பிறகு ராவுத்தர் மூலம் விஜயகாந்த் கதை கேட்டவுடன் செல்வமணிக்கு உதவி பண்ணும் விதமாக விஜயகாந்த் நடிப்பதற்கு சம்மதத்தை கொடுத்து நடித்த படம் தான் புலன் விசாரணை. அதே மாதிரி சரத்குமார் பணரீதியாக நஷ்டப்பட்டு ஒன்னும் இல்லாமல் இருக்கும் பொழுது அவருக்கு நெகட்டிவ் கேரக்டரை தூக்கிக் கொடுத்ததும் விஜயகாந்தின் புலன்விசாரணை தான்.

Also read: கேப்டன் துயில் கொள்ளப் போவது இங்குதான்.. விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எப்போது.? வெளியான அறிவிப்பு

சத்திரியன்: விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்களில் சில படங்களை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்து விடும் என்பதற்கு உதாரணமாக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தது சத்திரியன். இதில் பேசக்கூடிய ஒவ்வொரு டயலாக்கும் எதிரியை தும்ஸம் செய்யும் அளவிற்கு இருக்கும். அத்துடன் நாம் தோல்வியை தழுவும் பொழுது இந்த படத்தில் விஜயகாந்தின் முக்கியமான காட்சிகளை நினைவு கூர்ந்தாலே கண்டிப்பாக நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டும்.

சேதுபதி ஐபிஎஸ்: தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நிஜ வாழ்க்கையில் அனைவருமே ஒரு சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை கண்முன்னே காட்டிய படமாக சேதுபதி ஐபிஎஸ் படம் வெற்றி பெற்றிருக்கும். அந்த வகையில் கேப்டன் நடித்த படங்களில் மறக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாத படங்களில் ஒன்றாக இப்பொழுது வரை வெற்றி பெற்று வருகிறது.

சின்ன கவுண்டர்: அரசியலிலும், மக்களுக்காகவும் குரல் கொடுத்து வந்த கேப்டன் குடும்பத்தில் இருப்பவர்களையும் கண்கலங்க வைக்கும் அளவிற்கு செண்டிமெண்ட் காட்சியில் பிச்சு உதறும் படம் தான் சின்ன கவுண்டர். எதார்த்தமான நடிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் அப்படியே வாழ்ந்திருப்பாரு. எந்த ஒரு சின்ன இடத்திலுமே சலிப்பு தட்டாத அளவிற்கு அதீத நம்பிக்கையுடன் நடித்து வெற்றி பெற்ற படம்.

ரமணா: சினிமாவில் இனிமேல் இந்த மாதிரி ஒரு கேரக்டர் ஆன சொக்கத்தங்கத்தை பார்க்கவே முடியாத அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு தலை சிறந்த நடிகர் என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார். முக்கியமாக இப்படத்தில் மருத்துவமனையில் நடக்கும் ஊழல்களையும் அராஜகத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக அமைந்த காட்சிகள் அனைத்தும் நடுநடுங்க வைத்திருக்கும்.

Also read: மூச்சை நிறுத்திய கலியுக கர்ணன் கேப்டன்.. இறுதி ஊர்வலம் அடக்கம் செய்யப் போவது இங்குதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்