வடிவேலுக்கு பேரும் புகழும் வாங்கி தந்த 6 கதாபாத்திரங்கள்.. தோற்றத்தாலேயே எல்லாரையும் கவர்ந்த பாடி சோடா

பொதுவாக எப்பேர்ப்பட்ட படங்களாக இருந்தாலும் நாம் அடிக்கடி பார்த்து ரசிக்கக் கூடியது நகைச்சுவை படமாக தான் இருக்கும். ஏனென்றால் நம்முடைய மனநிலையை முழுவதுமாக மாற்றி நம்மளை ஒரு நிதானத்திற்கு கொண்டு வரக்கூடிய பவர் அந்த காமெடியில் தான் இருக்கிறது. அந்த வகையில் நமக்கு நகைச்சுவையே அள்ளித் தருபவர் தான் வடிவேலு. இவருடைய காமெடி மட்டும் அல்லாமல் இவருடைய தோற்றமும் சேர்ந்து நகைச்சுவை அளித்திருக்கும். அதிலும் ஒவ்வொரு படத்திற்கும் இவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தினால் பேரும் புகழும் அடைந்திருக்கிறார். அந்த கதாபாத்திரங்களை பற்றி பார்க்கலாம்.

நாய் சேகர்: சுராஜ் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி, வடிவேலு நடிப்பில் தலைநகரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் இவருடைய கதாபாத்திரம் கிராமப்புறத்தை விட்டு நகர்ப்புறத்தில் ரவுடியாக நடிக்கும் ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரம் தான் நாய் சேகரின் கதாபாத்திரம். இப்படத்தில் இவர் சொல்லும் வசனங்களான “,எல்லாரும் பார்த்துக்கோங்க, நான் ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடிதான் மற்றும் பாடி ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக், இதுதான் அழகுல மயங்கி விழுகிறதா” இதை வைத்து இன்னும் நாம் நிறைய பேரை கலாய்த்து வருகிறோம்.

கைப்புள்ள: சுந்தர் சி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு பிரசாந்த், வடிவேலு நடிப்பில் வின்னர் திரைப்படம் வெளிவந்தது. இதில் வடிவேலு அவருடைய கிராமத்தில் தன்னை ஒரு வலுவான போலி முரட்டு இளைஞனாக காட்டும் விதமாக கைப்புள்ள என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் பேசிய பிரபலமான வசனங்களான “வேணா வலிக்குது அழுதுடுவேன்” மற்றும் “இப்படியே உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக ஆக்கி வச்சிருக்காங்க”.

Also read: அப்பவே வடிவேலுவை தட்டி வைத்த கவுண்டமணி.. வளர்த்து விட்டவர் காலையே வாரிவிட்ட வைகைப்புயல்

பாடி சோடா: பிரபுதேவா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு விஜய், அசின் மற்றும் வடிவேலு நடிப்பில் போக்கிரி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் பாடி சோடாவாக குங்ஃபூ சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருப்பார். இதில் இவரின் ஒவ்வொரு தோற்றத்தையும் மாற்றிக் கொண்டு விஜய்யை பாலோ பண்ணும் கேரக்டரில் வரும்போது இவரை கண்டுபிடித்து விடுவதால் நானும் பார்த்துகிட்டு இருக்கேன் எப்படி டா கண்டுபிடிக்க என்று கேட்க அதற்கு தலையில் இருந்த கொண்டையை மறந்திட்டியே என்ற காட்சிகள் பல மீம்ஸ்க்கு உதவியாக இருந்தது.

என்கவுண்டர் ஏகாம்பரம்: சுராஜ் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு அர்ஜுன், வடிவேலு நடிப்பில் மருதமலை திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுனின் மூத்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஏட்டையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் இவருடைய முகபாவணையை வைத்து பல மீம்ஸ்களும் மற்றும் மக்கு போலீசாகவும் நடித்து என்கவுண்டர் ஏகாம்பரமாக மக்கள் மத்தியில் இடம்பெற்றார்.

Also read: வடிவேலு வாண்டடா போய் ஏழரை கூட்டிய 5 நடிகர்கள்.. அஜித்தையே காண்டாக்கிய சம்பவம்

சூனா பானா: பாரதி கண்ணன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு கண்ணாத்தாள் என்ற படத்தில் கரன் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் சூனா பானா அதாவது சுப்பையா பாண்டியனை சுருக்கி அப்படி வைத்திருப்பார். இதில் இவர் திருட்டு வேலையை செய்து அதில் மாட்டிக் கொண்டு பஞ்சாயத்தில் இவரை கேள்வி கேட்கும் போது அவர்களையே மண்டையை பிச்சுகிட்டு போகிற படி சொன்னதுக்கு மேலே சொல்லி தப்பித்துக் கொள்வார்.

வண்டு முருகன்: ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ஆர் கே மற்றும் வடிவேலு நடிப்பில் எல்லாம் அவன் செயல் திரைப்படம் வெளிவந்தது. இதில் வடிவேலு வண்டு முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் இவர் இன்னும் காமெடியான பேச்சு “மேடையில் பேசும் போது ஐயோ நம்ம மைண்ட் அங்க வர போகுதோ சரி சமாளிப்போம்” அடுத்ததாக “ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுகிறேன்” “அதற்கு அடுத்து “வண்டு முருகனாக இருந்த என்ன வகுத்திலேயே மிதிச்சு நண்டு முருகனாக ஆக்கிட்டாங்க” என்று இவருடைய தோற்றத்தில் சொல்லும் அந்த காமெடியை இப்ப நினைத்தால் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.

Also read: பண்ணை வீட்டில் ஒன்னும் பண்ண முடியலன்னு கடும் ஆதங்கம்.. வடிவேலு பார்ட்னரிடம் பஞ்சரான பயில்வான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்