சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

எதிர்நீச்சலின் 500-வது எபிசோட் இப்படித்தான் இருக்கும்.. கிளைமாக்ஸ் ரகசியத்தை போட்டு உடைத்து திருச்செல்வம்

டிஆர்பி-யில் மற்ற சேனல்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் அருமையாக இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று  சின்னத்திரை ரசிகர்கள் வாயாற பாராட்டுகின்றனர். இந்நிலையில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலின் கிளைமாக்ஸ் என்ன என்பதை  திருச்செல்வம் போட்டு உடைத்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் படித்திருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு தங்களின் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக படும் போராட்டத்தை அனுதினமும் காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

Also Read: பிரபல சேனலை ஒரேடியாக ஓரம் கட்டிய சன் டிவி.. டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்

இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் கருத்துகள் குவிகிறது. இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலின் 500-வது எபிசோட் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். 

எதிர்நீச்சல் சீரியலில் இருக்கும் பெண்களுக்கு சிறு துரும்பு போல ஒரு கயிறு மட்டும் கிடைத்தால் போதும், அதைப் பிடித்துக் கொண்டே அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். இதை மையமாக வைத்தே இந்த சீரியலை கொண்டு செல்ல பார்க்கிறேன். இதைதான் கிளைமாக்ஸில் காட்ட நினைக்கிறேன்.

Also Read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளத்தின் மொத்த லிஸ்ட்.. ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சம் பட்ஜெட்டா

கடைசியில் இந்த நான்கு பெண்களும் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி விடுவார்கள். இந்த சீரியலின் மூலம் பல பெண்களுக்கு தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கற்றுக்கொண்ட விரும்புகிறேன். இதனாலேயே இதற்கு முன்பு கோலங்கள் சீரியலில் தனக்கு கிடைத்த ரசிகர்களை விட பல மடங்கு அதிகமாக எதிர்நீச்சல் சீரியலின் மூலம் கிடைத்திருக்கிறது.

இந்த சீரியலில் சுவாரசியம் குறைந்துவிட்டது என்று எப்போது ரசிகர்களுக்கு தோன்றுகிறதோ அப்போதுதான்அதற்கான முடிவு தெரியும். அதுவரை இந்த சீரியலில் இருக்கும் பெண்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று திருச்செல்வம் கூறியுள்ளார்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

- Advertisement -

Trending News