திறமை இருந்தும் வளர முடியாமல் துடிக்கும் 5 இளம் ஹீரோக்கள்.. மறக்க முடியாத இளம் பவானி

5 young heroes who struggle to grow despite their talent in tamil cinema: சினிமாவில் திறமைகள் இருந்தும் பல பேர் ஜொலிக்க முடியாததற்கு காரணம்,நிரூபிக்க வேண்டிய சந்தர்ப்பமும் சரியான காலமும் அமையாததே ஆகும். உதாரணமாக விக்ரம் அவர்கள் நடிப்பிற்காக எதையும் செய்யும் ஒரு உந்துதல் இருந்தாலும் அவரது வெற்றிக்கு ஒரு சேது தேவையாக இருந்தது. அதுபோல வெற்றிக்காக காத்திருக்கும் இளம் ஹீரோக்கள் இதோ

அர்ஜுன் தாஸ்: லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் அர்ஜுன் தாஸ். வசீகர தோற்றத்தாலும், தனித்துவமான குரலாலும் பெண் ரசிகர்களை அதிகம் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், முக்கிய ரோலில் சிறப்பான கதை அம்சத்துடன் சில படங்களில் நடித்திருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற முடியாமல் தனக்குரிய மார்க்கெட்டை பெற போராடிக் கொண்டிருக்கிறார்.

மகேந்திரன்: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக போராடிக் கொண்டிருக்கும் மகேந்திரன் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர், லேபிள், மாறன் போன்ற படங்களில் நடித்திருந்தார். லோகேஷ் மற்றும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் இளவயது பவானியாக வந்து மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நவீன்கணேஷ் இயக்கத்தில் திரில்லர் மூவியில் கமிட் ஆகியுள்ளார்.

Also read: 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

நவ்தீப்: பிரகாஷ்ராஜ் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நவ்தீப் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நவ்தீப் பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறாராம்.

ஸ்ரீ: வழக்கு எண்18/9  படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஸ்ரீ தனது சிறந்த நடிப்பின் மூலம் அதிக பாராட்டுகளை குவித்தார். தொடர்ந்து லோகேஷின் மாநகரம் படமும் கடந்த ஆண்டு ஸ்ரீ நடிப்பில் வெளியான இறுகபற்று திரைப்படமும் நேர்மறையான விமர்சனத்தை கொடுத்ததோடு வசூலிலும் வெற்றி பெற்றது. சிறந்த படங்களின் மூலம் தனக்குரிய முத்திரையை பதித்த ஸ்ரீ தொடர்ந்து படங்கள் இல்லாமல் தவித்து வருகிறார்.

கதிர்: பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் தோற்றத்தில் இருக்கும் கதிர் தற்போது மாணவன் படத்தில் நடித்து வருகிறார். மதயானை கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கதிர் தொடர்ந்து கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில், லியோ போன்ற பல படங்களில் நடித்து முத்திரை பதித்திருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ் பக்கம் சென்று உள்ளார் கதிர்.

Also read: உண்மை கதைகளை அப்படியே கண்முன் நிறுத்திய 6 படங்கள்.. கண்கலங்க வைத்த பரியேறும் பெருமாள் BA BL

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்