புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

Lokesh: குறுகிய காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்து தன்னுடைய அசாத்தியமான திறமையினால் கோலிவுட் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். இவர் இயக்கிய படங்கள் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பார்ப்பவர்களை கவரும் வகையில் அமைகிறது. அதனாலயே இவருடைய படத்தில் தன்னுடைய முகத்தை காட்டி விட வேண்டும் என்று பலரும் துடித்துக் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சில நடிகர்களை தூக்கி விட்டு சினிமா கேரியரில் அவர்களுக்கு வெளிச்சத்தை காட்டியிருக்கிறார். அதில் முதலாவது நடிகர் சார்லிக்கு சீரியஸான கேரக்டரை கொடுத்து ரி என்ட்ரி மூலம் தூக்கிவிட்டு இருக்கிறார். அதாவது லோகேஷ் முதன் முதலாக இயக்கிய படம் தான் மாநகரம். இந்த படத்தில் சார்லி, டேக்ஸி டிரைவராக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Also read: லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தலைவர்-172.. ஹைப் குறையாம தொக்கா தூக்கிய ரஜினி

அடுத்ததாக கைதி படத்தில் நெப்போலியன் கேரக்டரை நம்மளால் மறக்கவே முடியாது. அந்த வகையில் தத்ரூபமான நடிப்பை கொடுத்து பார்ப்பவர்களின் கைதட்டலை வாங்கியவர் தான் நடிகர் ஜார்ஜ் மரியன். இவர் குணச்சித்திர கேரக்டரில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், கைதி படத்தை மறக்கவே முடியாது. முக்கியமாக போலீஸ் ஸ்டேஷனில் ரவுடிகளிடம் இருந்து இளைஞர்களை காப்பாற்றும் பொறுப்பில் தரமான நடிப்பை கொடுத்திருப்பார்.

இதற்கு அடுத்து பல படங்களில் ஹீரோவாகவும், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் நரேனுக்கு கைதி படத்தில் முழுவதுமாக பயணிக்க மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், கடமையை சரியாக பண்ணி விட வேண்டும் என்று நடிகர் கார்த்தியை மிரட்டி அவருடைய டார்கெட்டை சரிவர செய்து முடித்திருப்பார்.

Also read: லியோ சென்சாரில் தப்பித்தாலும் அவன்ட உங்க பருப்பு வேகாது.. தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட லோகேஷ்

அடுத்ததாக அர்ஜுன் தாஸ் மாதிரி ஒரு தனித்துவமான நடிகர் இருக்கிறார் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு ஃபேன்ஸ் அதிகமாகி விட்டார்கள் என்று சொல்லலாம். மேலும் லோகேஷ் இலக்கிய முக்கால்வாசி படங்களில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.

இதற்கு அடுத்து கைதி படத்தில் காமாட்சி என்கிற கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் இருந்து வந்த தீனா நடித்திருப்பார். இவருக்கும் ஒரு தரமான கேரக்டரை கொடுத்து படம் முழுவதும் ட்ராவல் பண்ற மாதிரி நடிக்க வைத்திருப்பார். இப்படி லோகேஷ் இயக்கிய படங்களில் சில நடிகர்களுக்கு முக்கியமான வாய்ப்பை கொடுத்து அவருடைய சினிமா கேரியரை தூக்கி நிறுத்திருக்கிறார்.

Also read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

- Advertisement -

Trending News