Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-leo-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோசமான ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்தாத விஜய்யின் 5 படங்கள்.. ஆடியன்சை வெறுக்கச் செய்த தளபதி

மோசமான ஹேர் ஸ்டைலை கொண்ட விஜய்-யின் 5 படங்கள்.

கோலிவுட்டில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக்கூடியவர் தான் தளபதி விஜய். எப்பொழுதுமே தனது படங்களின் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர் தனது ஹேர் ஸ்டைலில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறார். அதிலும் படங்களில் இவர் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைலினால் ஆடியன்சையே வெறுக்க செய்துள்ளார். அப்படியாக மோசமான ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்தாத விஜய்யின் 5 படங்களை இங்கு காணலாம்.

பைரவா: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படம் ஆகும். அதிலும்  இவரின் முந்தைய படங்கள் ஆன புலி, தெறி போன்றவற்றில் கூட இவரின் ஹேர் ஸ்டைல் ஆனது ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. ஆனால் பைரவா படத்தில் இருந்து தான் விஜய் தனது ஹேர் ஸ்டைலுக்கான கவனத்தை கொடுக்காமல் இருந்து வருகிறார்.

Also Read: 3வது படத்திலேயே எகிறிய கவின் மார்க்கெட்.. விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய ஹீரோ

பிகில்: விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த பிகில் திரைப்படத்தினை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். அதிலும் இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில்  நடித்திருப்பார். இதில் அப்பா கதாபாத்திரத்திற்கு உண்டான ஹேர் ஸ்டைல் கச்சிதமாக பொருந்திய நிலையில், மகன் ரோலில் நடித்த விஜயின் ஹேர் ஸ்டைல் ஆனது மிகவும் மோசமாகவே இருந்தது.

பீஸ்ட்: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட். மேலும் இப்படம் வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதிலும்  இந்தப் படத்தில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகவும் கேலிக்குள்ளானது என்றே சொல்லலாம்.

Also Read: நாங்க கொடுக்கிற காசு, புகழ் மட்டும் வேணுமா? விஜய்யை கிழித்து தொங்கவிடும் மீடியா

வாரிசு: இயக்குனர் வம்சி இயக்கத்தில் அஜித்தின் துணிவுடன் ரேசில் களம் இறங்கிய திரைப்படம் தான் வாரிசு. அதிலும் இப்படம் பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாக அமைந்திருந்தது. மேலும் வாரிசு திரைப்படத்தில் பிஸ்னஸ் மேன் லுக்கில் அம்சமாக இருந்தாலும், முதல் பகுதியில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் ஆனது ஆடியன்ஸை வெறுக்க செய்தது என்றே சொல்லலாம்.

லியோ: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. அதிலும் வாரிசை தொடர்ந்து லியோவிலும் படு மோசமான ஹேர் ஸ்டைலில் நடித்து வருகிறார். அதிலும் விஜய்யை பார்ப்பதற்கு வித்தியாசமான கெட்டப்பில் இருப்பது போல தோற்றமளிக்கிறார்.

Also Read: லியோ டீமில் இணைந்த அடுத்த 5-வது புது வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்தே திக்கு முக்காட வைக்கும் லோகேஷ்

Continue Reading
To Top