Connect with us

Entertainment | பொழுதுபோக்கு

முடிஞ்சா கண்டுபிடி என ட்விஸ்ட் வைத்த கமலின் 5 படங்கள்.. 34 வருடத்திற்கு முன்பே வேடிக்கை காட்டிய அப்பு

எல்லோருக்குமே எப்படி கமல் குள்ளமாக நடித்தார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

apoorva-sagodharargal

HIDDEN SECRETS IN KAMAL MOVIES : கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு திறமை மற்றும் தொழில் வளர்ச்சி பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. கமல் திரை உலகில் சவாலான கதாபாத்திரங்களை முயற்சித்து நடித்து வெற்றியோடு விருதுகளையும் குவித்தவர். தனது படங்களில் பல புதிய உக்திகளை கையாண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொள்ள பாடமாகவும் இருந்துள்ளார். அவ்வாறு தனது படங்களில் மற்றவர்களும் கற்றுக்கொள்வார்கள் என கமல் மறைத்த 5 விஷயங்களை இப்பதிப்பில் காண்போம்.

அபூர்வ சகோதரர்கள் : தந்தையை கொன்றவர்களை பழிவாங்கும் பிள்ளைகளின் கதை. அப்பு கதாபாத்திரத்தில் குள்ளமாக நடித்திருப்பார் கமல். சிஜி போன்ற தொழில்நுட்பங்கள் பெரிதாக இல்லாத காலத்தில் அப்பு கமல் வரும் காட்சிகளை சிறப்பாக படமாக்கி இருப்பார்கள். முழுக்கை ஆடைகள் மட்டுமே அணிந்திருப்பார் அப்பு கமல். சில காட்சிகளில் காலை முட்டு போட்டுக் கொண்டும், சில காட்சிகளில் குழிகளில் நின்று கொண்டும் நடித்ததிருப்பார். இது எல்லோருக்குமே எப்படி கமல் குள்ளமாக நடித்தார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  : கமல் – மனோரமா காம்போவில் மனதில் நிற்கும் 6 படங்கள்.. கடைசி நேரத்தில் கேரக்டர் மாற்றப்பட்ட படம்

ஆளவந்தான் : 2001 இல் வெளிவந்த சைக்கோ திரில்லர் படமான ஆளவந்தான் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருப்பார். டெக்னிக்கலாக படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் இருந்து பல தொழில்நுட்ப சாதனங்கள் இப்படத்திற்காக வரவழைக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹாலிவுட் படத்தில் வருவது போல காட்சிகளை அமைத்திருப்பார்கள். ஷங்கர்-எஹ்சான் – லாய் மற்றும் மகேஷ் மாதவன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்து இருப்பார்கள். இந்த படத்தின் சவுண்ட் எபக்ட்ஸ் மிரள வைப்பதாக அமைந்தது. இந்தப் படத்தில் மனிஷா கொய்ராலாவை கத்தியால் கிழித்து நந்து கொலை செய்யும் காட்சியை கமல் கார்டூனாக வைத்து எடுத்து இருப்பார். ரத்த வயலென்சை குறைத்துக் காட்டுவதற்காக இப்படி அமைந்திருப்பார்கள்.

மன்மதன் அன்பு : 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மாதவன், த்ரிஷா, சங்கீதா ஆகியோர் கமலுடன் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நீல…வானம் என்ற பாடலை கமல் மற்றும் பிரியா கிமேஷ் பாடியிருப்பார்கள். இந்த பாடல் காட்சியில் ஒரு புதுமையை கையாண்டிருப்பார் கமல். இப்பாடலில் கமல் பாடும் வாய் அசைவுகள் முன்னோக்கி வரும், ஆனால் பாடல் காட்சிகள் ரிவர்ஸில் பின்னோக்கி போகும். பாடல் காட்சியில் கிட்டத்தட்ட படத்தின் பிளாஷ் பேக் கதையே சொல்லி முடித்திருப்பார் கமல்.

Also Read  : விட்டா கிரணையே மிஞ்சிடுவாங்க போல.. மாதவன் பட நடிகையா இது.? செகண்ட் ரவுண்டுக்கு விரிக்கும் வலை

அன்பே சிவம் : இந்த படத்தில் “முன்பின் தெரியாத ஒரு மனுஷனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே அது தான் சார் கடவுள்” என்று எல்லா மக்களையும் சிந்திக்க வைத்த ஒரு திரைப்படம். கமல்க்கு மட்டுமின்றி இயக்குனர் சுந்தர்.சிக்கும் என்றும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் ஒரு படமாக அமைந்தது. வித்யாசாகர் இசையில் யார் யார் சிவம் என்ற பாடலில் விபத்தில் சிக்கிய கமல், சிகிச்சைக்கு பின் அவருடைய முகத்தில் உள்ள அந்த தழும்புகளை ரொம்பவும் நேச்சுரலாக காட்டியிருப்பார்கள்.

சத்யா : வேலையில்லா பட்டதாரி இளைஞன் அவர் நண்பர்களுடன் பாடிய பாடலாக அமைந்திருக்கும் பாடல் போட்டோ படியது படியது இதில் கிட்டத்தட்ட எல்லா வாகனங்களும் அதன் சப்தங்களுடன் பாடலுடன் அப்படியே படமாக்கப்பட்டு இருக்கும். குறிப்பாக ஒரு ஃபிளைட் வரும் காட்சியில் ஃபிளைட் சவுண்டுடன் பாடலை அப்படியே மிக்ஸ் செய்து எடுத்து இருப்பார்கள். திரை உலகில் பயணித்து 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கமலுக்கு வாழ்த்து தெரிவித்து பெருமைப்படுத்த இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இந்த சத்யா படத்தின் போட்டோ படியுது என்ற பாடலை மறு ஆக்கம் செய்து வெளியிட்டு இருந்தார்.

Also Read  : சந்தில் சிந்து பாடிய சிவகார்த்திகேயன்.. பிசினஸ் வேற, நட்பு வேறன்னு மறுத்த கமல்

Continue Reading
To Top