புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இயக்குனர்களை காதல் திருமணம் செய்து கழட்டிவிட்ட 5 நடிகைகள்.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சீதா

பொதுவாக ஒரு சில நடிகைகளை பொறுத்த வரைக்கும் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தாலும், அவர்களுடைய சொந்த வாழ்க்கை என்பது கொஞ்சம் ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கும். பத்தில் இரண்டு நடிகைகளின் திருமண வாழ்க்கை என்பது குறுகிய கால கட்டத்திலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. இந்த ஐந்து ஹீரோயின்கள் சினிமாவில் இருக்கும் பொழுதே இயக்குனர்களை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து பின்னர் தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்தும் பெற்றிருக்கின்றனர்.

சோனியா அகர்வால் – செல்வராகவன்: இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் குறுகிய காலத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். தற்போது செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

Also Read:அந்தரங்க விளையாட்டால் 2 முறை கர்ப்பமான ரசகுல்லா நடிகை.. தயாரிப்பாளர் செய்த சித்து வேலை

அமலாபால் – ஏ எல் விஜய்: இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அமலாபால் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். குறுகிய காலத்திலேயே காதல் வந்தது போல், திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுடைய விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

ரேவதி – சுரேஷ் மேனன்: 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரேவதி. பெண்ணியம் பேசும் நிறைய படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார். புதிய முகம் என்னும் திரைப்படத்தில் நடித்த போது சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு அவருடைய தம்பியை திருமணம் செய்த ரேவதி அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

Also Read:நடிகையுடன் இரவு முழுக்க அந்தரங்க விளையாட்டு.. விஷயம் தெரிந்து வச்சி செய்த இயக்குனர்

சீதா – பார்த்திபன்: புதிய பாதை என்னும் திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா. சில காலங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சீதா சின்னத்திரையில் வேலன் தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார். அப்போது சின்னத்திரை நடிகர் சதீஷ் உடன் காதல் ஏற்பட்டதால் நடிகர் பார்த்திபனை இவர் விவாகரத்து செய்தார். தற்போது சதீஷையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

ராதிகா – பிரதாப் போத்தன்: 1985 ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தை தயாரித்தவர் ராதிகா. அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு அதே ஆண்டில் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று விட்டனர்.

Also Read:ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

- Advertisement -

Trending News