நயன்தாரா சம்பாதிக்க ஆசைப்பட்டு தோல்வியை சந்தித்த 5படங்கள்.. பெரிய நாமத்தை போட்ட கனெக்ட்

Actress Nayanthara: நயன்தாரா சினிமாவில் ஜெயிப்பதற்கு ஆரம்ப காலங்களில் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். அதன் பின்னர் முன்னணி ஹீரோயின் ஆக இன்று வரை இருந்து வருகிறார். ஆரம்ப காலங்களில் டாப் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஓட ஆரம்பித்த நயன், அதன்பின்னர் வாய்ப்புகள் இருக்கும்போதே வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என படங்கள் தயாரித்தார். அதில் இந்த ஐந்து படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தது.

நெற்றிக்கண்: தென் கொரிய படமான பிளைன்ட் படத்தின் மறு ஆக்கம் தான் நெற்றிக்கண். பார்வையற்ற ஒரு பெண் குற்றவாளி ஒரு தொடர் கொலைகாரனை தேடும் கதைக்களமாக இது அமைந்தது. நயன்தாராவின் நடிப்பை தாண்டி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமே இல்லை. படத்தின் நீளமும் இதன் தோல்விக்கு முக்கிய காரணம் ஆக அமைந்தது.

கூழாங்கல்: அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியான படம் தான் கூழாங்கல். இந்த படம் நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. படத்தின் கூடுதல் பிளஸ் யுவன் ஷங்கர் ராஜா தான். நயன்தாரா இதன் வெற்றி மீது அசைக்க முடியாத அளவில் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.

Also Read:உயிர், உலகத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

காத்துவாக்குல ரெண்டு காதல்: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண அறிவிப்பிற்கு முன் நானும் ரவுடிதான் படம் போல ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என இருவரும் திட்டமிட்டார்கள். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா கூட்டணியில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் ஹைப் ஏற்படுத்தியது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் படம் படுதோல்வி அடைந்தது.

ராக்கி: இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கு அறிமுக படமாக அமைந்தது தான் ராக்கி. இந்த படத்தை நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் விநியோகித்தது. இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரோகினி ஆகியோர் நடித்திருந்தார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவில்லை.

கனெக்ட்: நயன்தாராவிற்கு மாயா போன்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய படம் தான் கனெக்ட். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை அசைத்துப் பார்த்ததும் இந்த படம் தான். காலகட்டத்திற்கு ஏற்ப திகிலான பேய்களை ரசிகர்கள் பார்க்க விரும்பினாலும், படம் முழுக்க திகில் மட்டுமே இருந்ததால் எதிர்பார்த்த வெற்றியை இது பெறவில்லை.

Also Read: வாய்ப்பில்லைன்னாலும் ஆட்டம் காட்டும் நயன்தாரா.. ஓவர் டார்ச்சரை அனுபவித்த இயக்குனர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்