சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாய்ப்பில்லைன்னாலும் ஆட்டம் காட்டும் நயன்தாரா.. ஓவர் டார்ச்சரை அனுபவித்த இயக்குனர்

Actress Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே சினிமா மார்க்கெட் ரொம்பவும் டல் அடித்து விட்டது. சமீபத்தில் ஜவான் படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், இப்போது ஒன்றிரண்டு படங்கள் கமிட் ஆகி கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பு தளங்களில் பழைய கெத்தை காட்ட வேண்டும் என்று ஓவர் ஆட்டம் போட்டு வருகிறாராம்.

நயன்தாரா தற்போது ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அன்னபூரணி என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த விஜயதசமி தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்கும் டெஸ்ட் படத்திலும் நயன்தாரா நடிக்க இருக்கிறார். இந்தி படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அன்னபூரணி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் நயன்தாரா ரொம்பவே ஆட்டம் போட்டு இருக்கிறார். ஜவான் படம் முடிந்த கையோடு தன்னுடைய சம்பளத்தை பத்திலிருந்து பன்னிரண்டு லட்சமாக உயர்த்தி இருக்கும் நயன், வாங்கிய சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கிறாராம். எப்போதுமே சூட்டிங்கிற்கு தாமதமாக தான் வருகிறாராம்.

படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வருவது மட்டுமல்லாமல் சாயந்திரம் 4 அல்லது 5 மணிக்கு எல்லாம் பேக்கப் செய்து விடுகிறார். படப்பிடிப்பு காட்சிகளில் நடிக்கும் பொழுது கூட அதில் சரியாக ஆர்வம் காட்டுவது இல்லையாம். இதனாலேயே அவர் நடிக்கும் பல காட்சிகளுக்கு அதிக டேக் எடுக்கப்பட்டு சொதப்பப்படுவதாக தெரிகிறது.

இதற்கெல்லாம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள்தான் காரணமாம். அதாவது நயன்தாரா தன்னுடைய குழந்தைகள் உயிர் மற்றும் உலகுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறாராம். அதனால் தான் சரியான நேரத்திற்கு கூட படப்பிடிப்பிற்கு வருவது இல்லையாம் . படப்பிடிப்பு நடக்கும் பொழுது கூட குழந்தைகள் மீது தான் அவருக்கு எண்ணம் இருக்கிறதாம்.

குழந்தைகள் மீது பாசம் இருப்பது பொதுவான விஷயம்தான். இருந்தாலும் ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடி சம்பளமாக வாங்கிவிட்டு, அதற்கு நியாயமாக நடக்காமல் இருப்பதுதான் தவறாக சொல்லப்படுகிறது. குழந்தைகளுடன் நேரமும் செலவழிக்க வேண்டும், பணமும் வேண்டும் என்று நயன்தாரா நினைப்பதால், அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தான் சங்கடப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News