ரஜினி, கமல் இருக்கும் போதே முத்திரை பதித்த புதுமுகங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய 5 படங்கள்

Rajini-Kamal: யானைக்கும் அடி சறுக்கும் என ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கமல் மற்றும் ரஜினியை மிரளவிடும் அளவுக்கு சில புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார்கள். உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் 100 நாட்களை தாண்ட சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது, இந்த ஐந்து படங்கள் 200 நாட்களை தாண்டி தியேட்டரில் வெற்றி நடை போட்டு இருக்கிறது.

200 நாட்களுக்கு மேல் ஓடிய 5 படங்கள்

கிழக்கே போகும் ரயில்: 16 வயதினிலே படத்தின் மூலம் வெற்றியை பார்த்தவர் பாரதிராஜாவின் இரண்டாவது படம் தான் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தில் சுதாகர் மற்றும் ராதிகா நடித்திருந்தார்கள். சாதாரண கிராமத்து சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்த படம் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் கிட்ட திரையில் ஓடி இருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் சுதாகர் ரஜினிக்கு போட்டியாக கூட பார்க்கப்பட்டார்.

நெஞ்சத்தை கிள்ளாதே: இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் நெஞ்சத்தை கிள்ளாதே. சுகாசினி, மோகன், பிரதாப் போத்தன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் 400 நாட்கள் தியேட்டரில் ஓடியது. இந்த படத்தில் வரும் பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் அதன் வித்தியாசமான சூழலால் இன்று வரை அதிகமாக ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

ஒரு தலை ராகம்: இயக்குனர் டி ராஜேந்தர் கதை எழுதி இசை அமைத்து 1980 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஒரு தலை ராகம். ஒரு தலை காதலை உணர்வு பூர்வமாக சொல்லிய இந்த படம் அப்போதைய இளைஞர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட 365 நாட்கள் தியேட்டரில் ஓடி இந்த படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது.

மண் வாசனை: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருந்த பாண்டியன் மற்றும் ரேவதி இருவருமே அறிமுகமான படம் மண்வாசனை. 1983 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. இந்தப் படம் தியேட்டரில் 300 நாட்களுக்கு மேல் ஓடியது.

என் ராசாவின் மனசிலே: இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் மற்றும் மீனா இணைந்து நடித்த படம் தான் என் ராசாவின் மனசிலே. இந்த படம் 1991 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தான் வைகை புயல் வடிவேலு அறிமுகமானார். கிராமத்து சூழலை சார்ந்த கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான ஆழமான காதலை எடுத்து சொல்லிய இந்த படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

 

 

 

 

 

 

 

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்