ஜீவாவின் மார்க்கெட்டை குட்டிச்சுவர் ஆக்கிய 5 படங்கள்.. சுந்தர் சி கூட கை கொடுக்காமல் போன பரிதாபம்

வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த ஜீவா ஆரம்பத்தில் நல்ல படங்கள் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த படங்களும் தொடர்ந்து அவருக்கு வெற்றி கொடுத்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த வந்தது. அவ்வாறு ஜீவாவின் கேரியர் குட்டிச்சுவர் ஆக்க காரணமாக இருந்த 5 படங்களை பார்க்கலாம்.

யான் : கடந்த 2014 ஆம் ஆண்டு ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா, நாசர், துளசி நாயர், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் யான். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை.

Also Read : தியேட்டரில் கதறவிட்ட ஜீவாவின் 5 மோசமான படங்கள்.. அட்வான்ஸ் கூட வேண்டாம் என தெரிந்த ஓடும் தயாரிப்பாளர்

கவலை வேண்டாம் : டி கே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனேனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கவலை வேண்டாம். இந்த படம் வந்ததே தெரியாத அளவிற்கு படுமோசமான தோல்வியை சந்தித்தது. நிறைய பிரபலங்கள் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றி பெறவில்லை.

கீ : ஜீவா, நிக்கி கல்ராணி, சுகாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கீ. இந்த படத்தில் சித்தார்த் என்கின்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார். முழுக்க முழுக்க காதல் படமாக வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை. ஜீவாவின் கீ படம் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் திணறியது.

Also Read : அப்பாவுக்கு போட்டியாக களமிறங்கிய ஜீவா.. சின்ன கல்லை போட்டு பெத்த லாபம் பார்க்க போட்ட பிளான்

வரலாறு முக்கியம் : சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் ஜீவா கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஜீவாவுக்கு கைகொடுக்கவில்லை. இந்த ஆண்டு ஜீவாவுக்கு படுமோசமான தோல்வி படமாக வரலாறு முக்கியம் படம் அமைந்துள்ளது.

காபி வித் காதல் : மிகப்பெரிய எதிர்பார்ப்பு உடன் ஜீவா, ஜெய் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் காபி வித் காதல். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படமும் ஜீவாவுக்கு கை கொடுக்கவில்லை. இந்த படம் வெளியான போது திரையரங்கு வெறுச்சோடி காணப்பட்டது.

Also Read : தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

Next Story

- Advertisement -