செம குஷியுடன் விஜய் அசால்ட்டா நடித்த 5 படங்கள்.. கடைசி வரை சச்சினுடன் போட்டி போட்ட அய்யாசாமி

Actor Vijay Movies: தற்போது கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய், எந்தவித டென்ஷனும் இல்லாமல் செம ஜாலி மூடில் நடித்த 5 படங்கள் தற்போது வரை அவருடைய ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாக இருக்கிறது. அப்படிப்பட்ட 5 படங்களை பற்றி பார்ப்போம்.

மின்சார கண்ணா: விஜய் இந்த படத்தில் பணக்கார வீட்டுப் பையனாக இருந்து கொண்டு தன்னுடைய காதலியின் அக்காவிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று குடும்பத்தோடு காதலியின் வீட்டில் சம்பளத்திற்கு வேலை செய்தார். ஆனால் இந்த படத்தில் அவர் ரம்பா உடன் செம ஜாலியாக ஒரு விதமான குஷி உடனே நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யை பார்க்கும்போதே அவருக்குள் இருக்கும் எனர்ஜி நமக்குள் வந்துவிடும். அந்த அளவிற்கு துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் செம குஷியுடன் நடித்துள்ளார்.

பிரெண்ட்ஸ்: பணக்கார வீட்டு பையனாக விஜய் இந்த படத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய நண்பர்களான சூர்யா மற்றும் ரமேஷ் கண்ணா இருவரும் ஏழைகள் என்ற வேறுபாடு இல்லாமல் சகஜமாக பழகுவார். இவர்களுடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கப் போகும்போது வடிவேலுவுடன் செய்திருக்கும் அக்கப்போரு படத்தைப் பார்ப்பவரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த படத்தில் விஜய் செம ஜாலி மூடில் நடித்துள்ளது இந்த படத்தைப் பார்க்கும்போதே தெரியும்.

Also Read: விஜய்யை காலி பண்ண நெல்சன், ரஜினி போட்ட பிளான்.. சம்பந்தமில்லாமல் தமன்னா பாட்டை வெளியிட்ட காரணம்.!

பத்ரி: மிடில் கிளாஸ் ஃபேமிலியில் இருக்கும் கல்லூரி மாணவனாக விஜய் இந்த படத்தில் பத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் ஒரு காலேஜ் பையன் எதையெல்லாம் விரும்புவார், எப்படி எல்லாம் தன்னுடைய வாழ்க்கையை ஜாலியாக வாழ நினைப்பார் என்பதை விஜய் இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து காட்டினார். இந்த படத்தில் வரும் விஜய் பார்க்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும், எப்போதுமே எனர்ஜி குறையாமல் ஜாலி மூடிலே இந்த படத்தில் வலம் வந்துள்ளார்.

வசீகரா: 2003 ஆம் ஆண்டு கே செல்வபாரதி இயக்கத்தில் விஜய், சினேகா நடிப்பில் வெளியான படம் தான் வசீகரா. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் முழுக்க விஜய் ரொம்பவே துருதுருவென செம குஷியுடன் நடித்துள்ளார். கிளைமாக்ஸில் மட்டுமே செண்டிமெண்ட் இருக்குமே தவிர படம் முழுக்க கலகலப்பாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒன்றாக தங்கி இருக்கும் வடிவேலு என்ற ஸ்டிட் ஆபிஸர் கட்டபொம்மு தான்.

விஜய்யை 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய ஸ்டிக் ஆபிஸர் கட்டபொம்முவை தளபதி கலாய்ப்பதும், அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன் என படம் முழுக்க இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போனது. இதனால் படத்தைப் பார்ப்போருக்கும் மற்ற படங்களை காட்டிலும் இதில் விஜய் ஓவர் குஷியுடன் இருப்பதாகவே தெரிந்தது.

Also Read: கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லும் விஜய்.. முழுக்க முழுக்க இது ரஜினியின் கதை

சச்சின்: இந்த படத்தில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக இருக்கும் விஜய் கதாநாயகி ஜெனிலியாவை அட்ராக்ட் செய்ததை விட இந்தப் படத்தைப் பார்த்த இளசுகளை அட்ரஸ் செய்து விட்டார். அந்த அளவிற்கு இவர் செய்யும் கேலி கிண்டலுடன் துருதுருவென நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

அதுவே இந்த படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. இந்த படத்தில் பல வருடங்களாக அரியர் வைத்து படித்துக் கொண்டிருக்கும் அய்யாசாமி வடிவேலு அப்படியே விஜய்யை காப்பிய அடிக்கப் பார்ப்பார். ஆனால் அப்படி செய்து அவர் வாங்கிய பல்பும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

Also Read: ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்