முன்னணி ஹீரோக்களுக்கு லக்கி ஆன 5 டைரக்டர்.. எப்படி கோல் போட்டாலும் வசூலில் வேட்டையாடும் லோகி

5 Directors Lucky For Leading Heroes: சினிமாவில் என்னதான் நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தாலும் அவர்களை ஒரு ஹீரோவாக நமக்கு தூக்கி நிறுத்திக் காட்டுவது இயக்குனர்கள் தான். அந்த வகையில் இயக்குனர்கள் எடுக்கக்கூடிய படங்களின் கதையை பொறுத்து தான் எல்லா ஹீரோக்கும் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். முக்கியமாக சில இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தால் மார்க்கெட் நல்லாவே எகிறும் என்று சில ஹீரோக்கள் நினைக்கிறார்கள்.

அதற்கேற்ற மாதிரி முன்னணி ஹீரோகளுக்கு லக்கி இயக்குனராக சில டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கக்கூடிய படங்களின் மூலம் வசூல் அளவிலும் கல்லா கட்டி விடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்களையும் கொக்கி போட்டு இழுத்த இயக்குனர்கள் யார் என்றால் நெல்சன், லோகேஷ், எச் வினோத், மணிரத்தினம் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்.

இதில் மணிரத்தினம் பல வருட காலமாக மூத்த இயக்குனராக இருந்தாலும் தற்போது வரை இவருடைய பிரம்மாண்டத்துக்கு ஈடு இணையாக ஒரு படம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இப்பொழுதும் தனித்துவமாக இருக்கிறார். அதனால் தான் இன்னமும் மணிரத்தினத்தை விடாமல் கெட்டியாக பிடித்து இருக்கிறார் கமலஹாசன். தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் தக் லைப்.

Also read: லோகேஷ் குழப்பத்திற்கு முடிவு கட்டிய ஷாருக்கான்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை

அடுத்ததாக நெல்சன் இயக்குனராக அவதரித்த இரண்டு மூன்று படங்களிலேயே விஜய் மற்றும் ரஜினியை வைத்து வசூல் அளவில் ஜெயித்துக் காட்டி விட்டார். அடுத்து எச் வினோத், இவர் எடுத்த படங்களான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, மேற்கொண்ட பார்வை, வலிமை, துணிவு அனைத்து படங்களுமே எதார்த்தமான கதையுடன் சமூகத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை முன்வைத்து இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் 233 வது படத்தையும் இயக்கப் போகிறார். அடுத்து லோகேஷ் இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் நாளா பக்கமும் இவரை தான் வலை போட்டு தேடி வருகிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அந்த அளவிற்கு இவருடன் நடித்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் வசூல் குவியம் என்பது உறுதியாகிவிட்டது.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன், இவர் எடுத்த படங்கள் சராசரியான விமர்சனங்களை பெற்றாலும் சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தை டாப் கியரில் எடுத்து அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார். அதனால் தான் என்னமோ அஜித்துக்கு இவர் மீது தீராத ஒரு நம்பிக்கை வந்து விட்டது. அந்த வகையில் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைக்கப் போகிறார். இப்படி தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக அனைத்து ஹீரோக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்கள்.

Also read: லியோவில் வந்து சிக்கிய ஏழரை, துரத்திவிட்ட ரஜினி.. அசராமல் கழட்டிவிட்டு லோகேஷ்

- Advertisement -spot_img

Trending News