லியோவில் வந்து சிக்கிய ஏழரை, துரத்திவிட்ட ரஜினி.. அசராமல் கழட்டிவிட்டு லோகேஷ்

Lokesh: லோகேஷ் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர் எடுக்கும் படங்களில் அடுத்து என்ன இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு படத்தில் பல சர்ப்ரைஸ்கள் காட்சிகளை வைத்து பார்ப்பவர்களை வியப்படையும் அளவிற்கு இயக்கக் கூடியவர். இவர் வந்த பிறகுதான் 20ஸ் கிட்ஸ்க்கு கமல்ஹாசன் யார், எப்படிப்பட்ட நடிகர் என்று தெரியும் அளவிற்கு உயர்த்தி காட்டி இருக்கிறார்.

அந்த அளவிற்கு விக்ரம் படத்தை தெறிக்க விட்டிருப்பார். இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து இரண்டாவது முறையாக கூட்டணி வைத்து லியோ படத்தை முடித்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்து வசூல் அளவில் கல்லா கட்டியது. அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார்.

இதற்கான கதையை ரஜினியிடம் சொல்லிய போது அவர் கூறிய விஷயம் ஒன்றுதான். அதாவது லியோவில் இரண்டாம் பாகம் சொதப்பலாக அமைந்ததற்கு முக்கிய காரணம் லோகேஷின் நண்பர் ரத்தினகுமார். இவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டதால் லோகேஷ் ரொம்பவே அஜாக்கிரதையாக இருந்து விட்டார். அதே மாதிரி லியோ சக்ஸஸ் மீட்டிலும் தேவையில்லாத பேச்சுக்களை பேசி விட்டார் ரத்தினகுமார்.

Also read: ரத்த வாடை வீசிய லோகேஷின் ஃபைட் கிளப் தேறியதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அதனால் இவர் மூலமாக மறுபடியும் தலைவர் 171 படம் சொதப்பலாக இருந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக ரஜினி திட்டவட்டமாக ரத்தினகுமார் வேண்டாம் என்று துரத்தி விட சொல்லி விட்டார். அதனால் ரஜினி சொன்னதை கேட்க வேண்டிய சூழ்நிலையில் லோகேஷ் இருப்பதால் கொஞ்சம் கூட யோசிக்காமல் லோகேஷும் அவருடைய நண்பர் ரத்தினகுமாரை தலைவர் 171 படத்தில் இருந்து கழட்டி விடப் போகிறார்.

இதற்கிடையில் தற்போது லோகேஷ் ஒரு வெப் சீரிஸை இயக்கியிருக்கிறார். அதை கூடிய விரைவில் சர்ப்ரைஸ் ஆக ரிலீஸ் பண்ண போகிறார். இதனை அடுத்து கொஞ்சம் பிரேக் எடுத்து கதையை எழுதி முடித்து ஏப்ரல் மாதம் தலைவர் 171 படத்தை ஆரம்பிக்க போவதாக கூறியிருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை லோகேஷ் எடுத்த படத்திலேயே முற்றிலும் மாறுபட்ட கதையாக தான் இருக்கப் போகிறதாம். அத்துடன் முழுக்க முழுக்க ஆக்சன் படமாகவும் ரஜினிக்கு ஏற்ற கதையாகத்தான் இருக்கும் என்று லோகேஷ் கூறியிருக்கிறார். மேலும் வழக்கம் போல் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார். ஆக மொத்தத்தில் அடுத்த வருடம் லோகேஷ் கூட்டணியில் ரஜினி நடிக்கப் போகும் படம் தரமான சம்பவத்தை ஏற்படுத்தப் போகிறது.

Also read: லோகேஷ் பெயரை கெடுக்க இப்படி ஒரு மட்டமான வேலையா.? அத தூக்கி குப்பைல போடுங்க

- Advertisement -spot_img

Trending News