சக்கைபோடு போட்ட 5 பயோபிக் படங்கள்.. சில்க்காய் வாழ்ந்த வித்யா பாலன்

சிலரது வாழ்க்கை மட்டுமே வரலாறாக மாறும். பல தலைமுறைகள் கடந்தும் அவர்களது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். இதனால் அந்த பிரபலங்களின் கதையை தழுவி பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இருவர் : மணிரத்தினம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் இருவர். 1980 களில் தமிழ்நாட்டு அரசியல் சின்னங்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையையும், திராவிட அரசியலுக்கு இடையே ஆன உறவையும் பற்றி இருவர் படம் எடுக்கப்பட்டது.

Also Read : சில்க் ஸ்மிதாவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய போராடிய 3 நடிகைகள்.. கவர்ச்சியின் உச்சம் தொட்டும் பலனில்லை

தி டர்டி பிக்சர் : மிலன் லுக்ரியா இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தி டர்டி பிக்சர். ஒரு காலகட்டத்தில் ரசிகர்களை தனது வசீகர பார்வையால் கட்டி போட்ட கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அப்படியே சில்க்காகவே வாழ்ந்திருந்தார் வித்யா பாலன்.

வனயுத்தம் : அர்ஜுன், கிஷோர், விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வனயுத்தம். இப்படம் நடிகர் ராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தியதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் வீரப்பனாக நடிகர் கிஷோர் மிரட்டி இருந்தார்.

Also Read : நயன்தாரா வேஸ்ட், தோனி தான் பெஸ்ட்.. அடடே குஷி மூடில் விக்னேஸ் சிவன்

எம்எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி : மிராஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், தீஷா பதானி, கியரா அத்வானி ஆகியோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எம் எஸ் தோனி. இப்படம் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ராக்கெட்ரி : மாதவன் இயக்கி, நடித்து வெளியான படம் ராக்கெட்டரி. இப்படத்தில் சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சூர்யா கேமியோ தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். இப்படம் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : சாக்லேட் பாய் மாதவனின் பதினோரு வெற்றி படங்கள்.. ஒன்னும் ஒன்னும் வேற ராகம்

Next Story

- Advertisement -