நயன்தாரா வேஸ்ட், தோனி தான் பெஸ்ட்.. அடடே குஷி மூடில் விக்னேஸ் சிவன்

Vignesh
Vignesh

மகேந்திர சிங் தோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்அவரின் பெயர் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரை மைதானத்தில் பார்த்தால் மட்டும் போதும் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கும் போது, விக்னேஷ் சிவன் அவருடன் எடுத்த போட்டோக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டிருக்கிறார்..

போடா போடி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இப்பொழுது காற்றுவாக்கில் 2 காதல் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது.

விக்னேஷ் சிவனின் தாயார் ஒரு காவல் அதிகாரி. வடபழனியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் ஐபிஎல் போட்டியில் செக்யூரிட்டி ஆபீஸராக வேலை செய்யும்போது தோனியுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அதைப் பார்த்து ஏங்கிய விக்னேஷ் சிவன், நானும் போட்டோ எடுக்க வேண்டும் என பெரிய ஆசையில் இருந்தாராம்.

இப்பொழுது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. விளம்பர படம் ஒன்றில் அவர் தோனியை இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவருடன் செலவழித்துள்ளார். போட்டோ மட்டும் எடுக்க ஆசைப்பட்ட விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம். இந்த படங்களை நயன்தாரா பார்க்கலை போல். கொஞ்சம் பொறாமை பட்டுக் கொள்வார்.

விக்னேஷ் சிவன் ஆக்சன் சொல்ல, தோனி நடிக்க விளம்பரப் படம் ரொம்ப ஜோராக தயாராகி உள்ளது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். தோனி தான் என் ரியல் ஹீரோ, அவர்தான் பெஸ்ட் என்று அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Dhoni-Vignesh
Dhoni-Vignesh

ஹர்பஜன் சிங், இர்பான் பதான் போன்றவர்கள் படத்தில் நடிக்க வந்து விட்டனர். அவர்கள் வரிசையில் தோனியும் சினிமாவில் களம் இறங்குவாரா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner