#RipDanielBalaji: வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டிய டேனியல் பாலாஜி.. கமலுக்கு தண்ணி காட்டிய அமுதன்

#RipDanielBalaji: நடிகர் டேனியல் பாலாஜி தன்னுடைய 48 வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கிறார். ப்ரொடக்சன் மேனேஜராக 2002ல் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். கமலிடம் உதவி இயக்குனராக சேர நினைத்த இவரை, மருதநாயகம் படத்தில் ப்ரொடக்சன் மேனேஜராக ஆக்கியிருக்கிறார் உலகநாயன்.

அதன்பின்னர் ராதிகாவின் சித்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இறுதியயாக இவர் நடித்த படம் தான் அரியவன். டேனியல் பாலாஜியின் வில்லத்தனமான நடிப்பு 90ஸ் கிட்ஸுகளுக்கு நன்றாகவே தெரியும். 2K கிட்ஸுகள் இந்த 5 படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கமலுக்கு தண்ணி காட்டிய அமுதன்

வேட்டையாடு விளையாடு: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் அமுதன் சுகுமாரன் என்னும் கேரக்டரில் டேனியல் பாலாஜி நடித்திருப்பார். டாக்டருக்கு படித்த, ரொம்ப ஸ்டைலான சீரியல் கில்லர் ஆக இந்த படத்தில் மிரட்டி இருப்பார். கமலுடன் நடக்கும் சண்டை ஒன்றில் அவருக்கே தண்ணி காட்டி தப்பிக்கும் காட்சியாக இருக்கட்டும், ஜோதிகாவை கடத்திக் கொண்டு வந்து மிரட்டும் காட்சியாக இருக்கட்டும் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார்.

பொல்லாதவன்: டேனியல் பாலாஜிக்கு சினிமாவில் பெரிய அடையாளத்தை கொடுத்த படம் பொல்லாதவன். ஒரு பைக்கை வைத்து சொல்லப்பட்ட 2 1/2 மணி நேர பட கதையில் பாலாஜி தன்னுடைய வில்லத்தனத்தில் அலற விட்டிருப்பார். ஒரு கொலையை செய்து விட்டு வழியில் நிற்கும் பைக்கை எடுத்துக்கொண்டு போனபின், தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் நடந்ததை ஃபிளாஷ்பேக்காக சொல்லும் ரவி கேரக்டர் இன்று வரை அவருடைய சினிமா பயணத்தில் பெரிய மைல்கல்.

வை ராஜா வை: இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த படம் தான் வை ராஜா வை. இதில் டேனியல் பாலாஜி ராஜேந்திரன் என்னும் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். அசாதாரண திறமை இருக்கும் ஹீரோ, தன்னுடைய திறமையை சூதாட்ட விளையாட்டில் பயன்படுத்திய பணம் சம்பாதிக்கும் கதை இது. அந்த சூதாட்டத்தை நடத்தும் வில்லனாக இவர் நடித்திருப்பார். கடைசியில் இவருடைய பாஸ் தனுஷ் கொக்கி குமாரு கேரக்டரின் என்ட்ரி கொடுக்கும் போது தியேட்டரே அலறியது.

வட சென்னை: பொல்லாதவன் கூட்டணி மீண்டும் இணைந்த படம் தான் வடசென்னை. இந்த படத்தில் டேனியல் பாலாஜியின் கேரக்டர் வில்லத்தனமானது என்று கூட சொல்லி விட முடியாது. தன்னுடைய அண்ணன் ராஜனை கொன்றவர்களை பழிவாங்க அவர்களுடனே இணைந்து வேலை செய்வது போன்ற கேரக்டர். அதிலும் தன்னுடைய அண்ணனின் மனைவி சந்திராவும் இதற்காகத்தான் காத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவருடன் கைகோர்க்கும் சீன்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.

காக்க காக்க: காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜிக்கு கொடூரமான வில்லன் கேரக்டர் எல்லாம் கிடையாது. தன்னுடைய மனைவியை காப்பாற்ற சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் இடத்தை வில்லனிடம் காட்டி கொடுத்து விடுவார். கடைசியில் வில்லனால் தன்னுடைய மனைவி கொலை செய்யப்பட்டது தெரிந்ததும், தன்னை தானே சுட்டு கொண்டு இறந்து விடுவார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்