Connect with us

Entertainment | பொழுதுபோக்கு

கமலுடன் ஜோடி போட மறுத்து தெறித்து ஓடிய 5 நடிகைகள்.. முத்த காட்சிக்கு பயந்த ஹோம்லி நடிகை

ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

kamal-meena

Actor Kamal: இந்த வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு இணையாக சுறுசுறுப்புடன் நடித்து வரும் கமலை பார்த்தால் நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் வேலைன்னு வந்து விட்டால் பம்பரமாக சுழன்று விடுவார். அப்படிப்பட்ட இவருடன் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

நதியா: 80 காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த இவருக்கு இப்போதும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இவரைப் பார்த்தால் ஹீரோவுக்கு அம்மா என்று கற்பூரம் அடித்து கூறினாலும் நம்ப முடியாது. அப்படி ஒரு இளமை துள்ளலுடன் இருக்கும் இவர் கமலுடன் மட்டும் நடித்தது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் அவருடன் இணைந்து நடித்தால் முத்த காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதனாலேயே இவர் தன்னை தேடி வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.

Also read: கமல், கவுண்டமணி காம்போவில் அசத்திய 5 படங்கள்.. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய இந்தியன்

திரிஷா: இவர் கமலுடன் இணைந்து மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவரை விஸ்வரூபம் 2 படத்தில் நடிக்க அணுகிய போது வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். இதற்கு முக்கிய காரணம் அந்த கேரக்டரில் இவருக்கு முக்கியத்துவம் இல்லை என்பதுதான். அதனாலேயே த்ரிஷா கமலுடன் 3வதாக நடிக்க கிடைத்த மூன்றாவது வாய்ப்பை தெரிந்தே தவற விட்டிருக்கிறார்.

காஜல் அகர்வால்: இவர் கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட்டானார். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிலும் பங்கேற்றார். ஆனால் பல தடங்கல்களின் காரணமாக இந்தியன் 2 ஷூட்டிங் தடைப்பட்டு போனது. அதன் பிறகு மீண்டும் ஆரம்பித்த நிலையில் காஜல் அகர்வால் படத்திலிருந்து விலகினார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தது ஒரு காரணமாக இருந்தாலும் வேறு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

Also read: ஹீரோயினா அவங்கதான் வேண்டும்ன்னு அடம்பிடித்த ராமராஜன்.. குயிலை விட்டுட்டு மயிலுக்கு ஆசைப்பட்டதால் விழுந்த அடி

மீனா: இவர் கமலுடன் இணைந்து அவ்வை சண்முகி படத்தில் நடித்திருக்கிறார். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த அப்படம் கமலின் திரை வாழ்வில் முக்கியமான ஒரு படமாக இருக்கிறது. அதன் பிறகு இந்த ஜோடி வேறு படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் கமலின் பாபநாசம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீனாவுக்கு கிடைத்தது. ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் என தெறித்து ஓடி இருக்கிறார்.

சுவலட்சுமி: கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாகவே நடித்தவர் தான் இவர். அதன் மூலமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடன் நடித்தால் சில நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இவர் வேண்டாம் என்று மதித்திருக்கிறார். அப்படியும் விடாமல் இவரை துரத்திய இயக்குனர்களும் உண்டு. ஆனால் முத்த காட்சிக்கு பயந்து வேண்டவே வேண்டாம் என இவர் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டாராம்.

Also read: ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் முதல் 8 நடிகைகள்.. 40 வயதில் அம்மா நயனை பின்னுக்கு தள்ளிய திரிஷா

Continue Reading
To Top