ஹீரோயினா அவங்கதான் வேண்டும்ன்னு அடம்பிடித்த ராமராஜன்.. குயிலை விட்டுட்டு மயிலுக்கு ஆசைப்பட்டதால் விழுந்த அடி

எண்பதுகளின் இறுதி காலகட்டத்திலும் 90களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியோருக்கு சரியான போட்டியாளராக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தவர் தான் ராமராஜன். கிராமத்து கதைக்களத்தில் கச்சிதமாக பொருந்தி நடக்கும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமும் இருந்தது.

அதன்பின் தன்னுடைய மார்க்கெட்டை இழந்த ராமராஜன் துணை நடிகராக நடிப்பதை சுத்தமாகவே தவிர்த்து விட்டார். இப்போது 62 வயதாகும் ராமராஜன் ஹீரோவாக நடிக்க துவங்கியிருக்கிறார். ஹீரோயினா அவங்க தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் ராமராஜனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் படாத பாடு படுகின்றனர்.

Also Read: தன்னுடைய பெருமை பாட பல லட்சம் சம்பளம் வாங்கிய கண்ணழகி.. மீனாவை வைத்து ரஜினிக்கு வீசிய வலை

நடித்தால் ஹீரோவா மட்டுமே நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து, வயது ஆகியும் தற்பொழுது எப்படியோ சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ராமராஜன். இந்த படத்தை தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்கி உள்ளார். இதில் ராமராஜன் உடன் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

முழு படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த படத்திற்கு கமிட்டாகி விட்டார். இந்த படத்திற்கு உத்தமன் என பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குனர் கார்த்தி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

Also Read: காதலுக்காக உயிரை விட்டு நடித்த 6 படங்கள்.. மீனா இறந்ததும் கூடவே உயிரை விட்ட நடிகர்

இந்த படத்தில் லாயராக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு காரணம் ராமராஜன் மீனாவிடம் கேட்க சொல்லி இயக்குனரை அனுப்பி வைத்துள்ளார். அவர் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மீனாவுக்கு மார்க்கெட் இல்லையென்றாலும் அவருக்கென்று தனி பெயர் உள்ளது.

மலையாளத்திலும் பெரிய நடிகர் உடன் நடித்து வருகிறார். இப்படி இருக்க திடீரென ராமராஜன் உடன் எப்படி நடிப்பது, இவ்வாறு யோசித்து சம்மதம் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறாராம். இதை ராமராஜன் புரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறார் என்று புரியாமல் முழித்து வருகிறார் இயக்குனர். குயிலை விட்டுட்டு மயிலுக்கு ஆசைப்பட்டதால் இப்படித்தான் அடி விழுகும்.

Also Read: ஹீரோவை காதலித்த அக்கா தங்கை கதை அம்சம் கொண்ட 6 படங்கள்.. மாத்தி மாத்தி விட்டுக் கொடுத்த ரம்பா,தேவயானி

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -